மரம் என்பது மனிதர்களுக்குக் கிடைத்த வரம். ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் அளவின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.23 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
11,000 லிட்டர் காற்று (11,000 liters of air)
ஒரு வளர்ந்த நபர் ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் காற்றை சுவாசிக்கிறார். இதில் 20 சதவீதம் ஆக்சிஜன். அப்படியென்றால், ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்சிஜனை கிரகித்துக்கொள்கிறார். 2.75 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.6,500. இதைக் கொண்டு கணக்கிட்டால் ஒரு மனிதன் ஒரு நாளைக்குச் சுவாசிக்கும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.13 லட்சம்.
ரூ.23 கோடி (Rs. 23 crore)
மரங்கள் தரும் சேவைகளை மதிப்பிட்ட ஆராய்ச்சிகளை ஒப்பு நோக்கும்போது 2 வளர்ந்த மரங்கள், ஒரு நபருக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு ஆண்டுக்கு ரூபாய் மதிப்பில் 23 கோடி.
எனவே நாட்டிற்கு பொதுநலனுக்காக மரங்களை நட முடியாவிட்டாலும், நம் சுயநலத்திற்காக வீட்டிலாவது சுத்தமான ஆக்சிஜன் நிறைந்த காற்றை சுவாசிக்கச் செடிகளை நட்டுச் செழிப்படையலாம்.
துளசி (Tulsi)
பொதுவாகவே மனிதனுக்குத் தேவையான மருத்துவ குணங்கள் நிறைந்தது. இரவிலும் ஆக்சிஜனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாலே இதனை புனிதம் காக்கும் கடவுளாக வணங்குகிறோம்.
மருள் என்னும் பாம்பு கற்றாழை (A Variety of Allovere)
இந்தச் செடி வளர அதிகத் தண்ணீரும் சூரிய ஒளியும் தேவையில்லை. வீட்டில் எந்த இடத்திலும் வளர்க்கலாம். இது காற்றில் உள்ள நச்சுக்களை உறிஞ்சி நல்ல ஆரோக்கியமான ஆக்சிஜனை இரவிலும் வெளிப்படுத்தி உதவுகிறது.
கற்றாழை (Allovera)
இது மற்ற தாவரங்கள் வெளிப்படுத்தும் ஆக்சிஜனையும் சுத்தப்படுத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது கற்றாழை
நித்தியக்கல்யாணி
இதுப் புழுதி காற்றையும் வாகனப்புகை, கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி சுத்தப்படுத்தி தூய ஆரோக்கியமான ஆக்சிஜன் நிறைந்த காற்றாக வெளிப்படுத்தும். இதற்கு வாஸ்து குறிப்புகள் இல்லாததால் வீட்டில் எந்த இடத்திலும் வைத்து வளர்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
லெமன்கிராஸ் (Lemongrass)
இது காற்றில் கலந்துள்ள பாக்டீரியாக்களை உறுஞ்சி நல்ல நறுமணமுள்ள ஆக்சிஜனைத் தருவதோடு சோர்வு நீங்கி அமைதி கிடைக்கும், கொசுத் தொல்லைகளும் இருக்காது.
மணிபிளான்ட் (Money Plant)
காற்றைச் சுத்தப்படுத்தி அதிக ஆக்சிஜனைத் தருகிறது. வீட்டில் தென்கிழக்கு திசையில் படரவிடச் செல்வ வளம் பெறுகும். இது விஷத்தன்மை உடையது என்பதால் கூடுதல் கவனம் தேவை.
ஐவி (Ivy)
இது படரும் தன்மை உடையது, தூசிக்காற்றை தூய்மையாக்கி நல்ல ஆக்சிஜனை தருவதோடு ஆஸ்துமா, அலர்ஜியை குணமாக்கும்.
மலைப்பனை (Bamboo Palm)
Bamboo Palm எனப்படும் இந்த மலைப்பனை, கெட்டுப்போன காய்கறிகளில் இருந்து வெளிவரும் துர்நாற்றம், பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால் உண்டாகும் புகையை சுத்தப்படுத்தும். இதற்கு குறைந்த அளவு சூரிய ஒளியும், தண்ணீரும் போதுமானது. வீட்டின் ஹால் மற்றும் வாசற்படி முன்பாக வளர்ப்பது சிறப்பு.
கூடுதலாக, வீட்டின் வாசற்பகுதியில் இடம் இருந்தால் ஆடுதொடா மற்றும் புங்கனை வார்ப்பதால் ஆலைக்கழிவுகளால் உண்டாகும் எரிவாயுக்கள், வாகன புகை மற்றும் தூசிகள் நிறைந்த மாசடைந்த வெப்பக்காற்றைச் சுத்தப்படுத்தி ஆரோக்கியமான ஆக்சிஜன் நிறைந்த, நல்ல குளிர்ந்த காற்றை வெளிப்படுத்தி நாம் சுவாசிக்க உதவுகிறது.
மேலும் படிக்க...
வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!
மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!
மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!