விதைப்பு:
ஒரு ஹெக்டருக்கு 500 கிராம் விதைகள் போதுமானது.
பருவம்:
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவு செய்வதற்கு உகந்தது. மேலும் வருடம் முழுவதுமே நடவு செய்யலாம்.
நாற்றங்கால்:
25க்கு 15cm அளவுள்ள பாலத்தினில் நன்கு மக்கிய தொழு உரம், செம்மண், மணல், மற்றும் மேல்மண் கலந்த கலவையை இரண்டு ஒன்று வீதத்தில் கலந்து நிரப்பவும். விதைகளை ஒரு சென்டிமீட்ர் ஆழத்தில் விதைக்க வேண்டும். விதிகள் ஐந்தில் இருந்து ஆறு விதைகள் விதைக்க வேண்டும். பின்னர் நிழல் படும் இடத்தில வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
நாற்றுக்கள் :
நாட்பத்தில் இருந்து அறுவது நாட்களில் நடவுக்கு தையாராகிவிடும்.
நீர் நிர்வாகம்:
வாரத்துக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
நாற்றங்காலில் நூற்புழு ஏற்படுவதை தடுக்க ஒரு பாலிதீன் பையில் ஒரு கிராம் கார்போ பியூரான் 3 ஜி குருணை மருந்தை இடவேண்டும்.
அறுவடை:
பழங்களின் நிறம் மஞ்சளாக மாறும் நிலை ஏற்பட்டதும் அறுவடை செய்யலாம்.