மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 December, 2018 2:53 PM IST

இரகங்கள்: கியூ. க்யுன் மற்றும் மரீஷியஸ்

பருவம்: ஜீலை முதல் செப்டம்பர் வரை

மண் மற்றும் தட்பவெப்பநிலை

தட்பவெப்ப நிலையைப் பொறுத்த வரை மிதவெப்பமான மலைப்பகுதி மிகவும் ஏற்றது. கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 700 மீட்டர் வரை நன்கு வளரும். மண்ணின் கால அமிலத் தன்மை 5.5 முதல் 7.0 வரை மிகவும் ஏற்றவை. களிமண் பூமியாக இருப்பின், நல்ல வடிகால் வசதி இருந்தால் பயிர் செய்யலாம்.

பயிர் பெருக்கம்: பக்க கன்றுகள், கொண்டைகள், மேல் கன்றுகள், நடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவைகளுள் பக்க கன்றுகள் தான் பெரும்பாலும் நடவிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இடைவெளி மற்றும் நடவு: இரட்டை வரிசை முறையில் நாற்றுக்களை நடவு செய்யலாம். கன்றுகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 30 செ. மீ ஆகவும் வரிசைகளுக்கு இடையிலுள்ள தூரம் 60 செ. மீ ஆகவும் இரண்டு வரிசைகளுக்கு இடையுலுள்ள தூரம் 90 செ. மீ ஆசவும் இருக்கும்படி நடவேண்டும். சுமார் 300 முதல் 350 கிராம் எடையுள்ள கன்றுகளை தேர்வு செய்து நடவேண்டும். கன்றுகளை வயலில் நடுவதற்கு முன்பு மேன்கோஜிப் 3 சதம் அல்லது கார்பெண்டாசிம் ஒரு சத சலவையில் சுமார் ஐந்து நிமிடங்கள் முக்கி நடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஒரு எக்டருக்கு தொழு உரம் 40 முதல் 50 டன் இடவேண்டும். பின்பு செடி ஒன்றிற்கு யூரியா 16 சிராம் சூப்பர் பாஸ்பேட் 4 கிராம் மியூரேட் ஆப் பொட்டாஷ் 12 கிராம் என்ற அளவில் இரு சமமாகப் பிரித்து கன்று நட்ட ஆறாவது மாதம் ஒரு முறையும் பன்னிரண்டாவது மாதம் ஒரு முறையும் இடவேண்டும்.

நுண்ணுட்டச்சத்துக் குறைபாடுகள்: அன்னாசியில் இரும்புச்சத்து குறைவாடு, துத்தநாகக் குறைபாடு மயில் துத்தக் குறைபாடுகள் காணப்படுவதுண்டு. இவற்றைப் போக்க இலைவழி ஊட்டாக 0.5 சதம் முதல் 1.00 சத சிங்க்சல்பேட் கரைசல் மற்றும் பெரஸ் சல்பேட் கரைசலை 15 சாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

அன்னாசியில் பூக்கள் சீராகப் பூப்பதற்கு, செடியில் 35 முதல் 40 இலைகள் இருக்கும்கோது நாப்தலின் அசிட்டிக் அமிலம் 10 பிபிஎம் கரைசலை 2 சத யூரியா கரைசலுடன் கலந்து செடிக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் குருத்தில் ஊற்றவேண்டும் அல்லது 20 பிபிஎம் எத்ராலுடன் 2 சத யூரியா மற்றும் 0.04 சத சோடியம் கார்பனேட்டை கலந்து செடிக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் இடவேண்டும். பழத்தின் எடையை அதிகரிக்க 200-300 பிபிஎம் நாப்தலின் அசிட்டிக் அமிலம் கரைசலை காய்பிடித்து இரண்டு மூன்று மாதங்களுக்குள் தெளிக்கவேண்டும். இதனால் 12-20 சதம் வரை பழங்கள் பெரியதாகும்.

செடிகளுக்கு மண் அணைப்பது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக மறுதாம்புப் பயிருக்கு மிகவும் அவசியம். ஒவ்வொரு முறை உரமிடும் பொழுதும், அறுவடை முடித்த பின்பும் செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும். பழத்தின் பருமனை அதிகரிக்க காய்பிடித்து ஒன்றிரண்டு மாதங்களில் கொண்டையின் குருத்தைக் கிள்ளி எடுத்துவிடவேண்டும். இதனால் 12-20 சதம் வரை பழங்கள் பெரியதாகும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் இரண்டு மில்லி தெளிக்கவேண்டும்.

அறுவடை

கன்று நட்ட 12 மாதங்கள் பூ வர ஆரம்பித்து 18 மதுல் 24 மாதங்களில் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும். பக்கக் கன்றுகள் மற்றும் நாற்றாங்கால் கன்றுகள் நடும்பொழுது அச்செடிகள் காய்ப்பதற்றகு சுமார் 18 மாதங்கள் ஆகின்றன. அன்னாசி கொண்டைகள் 24 மாதங்களிலும், மேல் கன்றுகள் 22 மாதங்களிலும் காய்ப்பிற்கு வரும். பழங்கள் மஞ்சள் றிநமாக மாறியபின் அறுவடை செய்யவேண்டும்.

மகசூல்: எக்டருக்கு 50 டன் பழங்கள்.

English Summary: Pineapple production method
Published on: 08 December 2018, 02:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now