Horticulture

Friday, 28 October 2022 02:40 PM , by: Deiva Bindhiya

PMFBY: Notice to insure rabi season horticulture crops

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்தல் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடைபெற்று வருகிறது.

தோட்டக்கலைப் பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதிகள் கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைப் பயிர்கள் காப்பீடு தொகை
ஏக்கர் - 1க்கு ரூ
காப்பீடு செய்வதற்கான கடைசி நாள்
கொத்தமல்லி 620.00 31.12.2022
வெங்காயம் 2217.50 31.01.2023
மிளகாய் 1220.00 31.01.2023
தக்காளி 1487.50 31.01.2023
வாழை 4875.50 28.02.2023
மரவள்ளி 1712.50 28.02.2023

PMFBY திட்டம்: உடனே குறுவை பயிருக்கு காப்பீடு செய்யுங்க

எனவே இதுவரை ராபி பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி இத்திட்டத்தில் காப்பீடு தொகை செலுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

MSP: குறுவை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அமைச்சரவை ஒப்புதல்

விரைவில் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்க ஏற்பாடு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)