Horticulture

Saturday, 07 September 2019 05:18 PM

ஆரோக்கியமான, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாத நாற்றுகளைத் தேர்வு செய்து நடுவதன் மூலம் பயிரின் விளைச்சல் மற்றும் உற்பத்தி செய்த பொருளின் தரத்தை, அதிகரிக்க முடியும். வழக்கமான மேட்டுப்பாத்தி அல்லது அகலப்பாத்தி மூலம் நாற்றுகள் மெலிந்து வீரியம் குறைந்து காணப்படுவதால் தரமான நாற்றுகள் இல்லாமல் உற்பத்தி குறைவதோடு உற்பத்தி செலவும் அதிகமாகிறது. ஆகவே தரமான நாற்றுக்கள் உற்பத்தி செய்ய நிழல்வலை குடில் அமைத்து குழித்தட்டு நாற்றங்கால் மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்யும் முறை சிறந்ததாக விளங்குகிறது.

குழித்தட்டு நாற்றங்கால்

இம்முறையில் நிழல்வலை குடில் அமைத்து குழித்தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவை வளர் ஊடகமாகப் பயன்படுத்தி, பூச்சிகள் புகாத நிழல்வலை கூடாரங்களில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குழித்தட்டுகள் பல அளவுகளில் கிடைக்கிறது. காய்கறிப் பயிர்களுக்கு 0.8  மி.மீ தடிமன் கொண்ட 98 குழிகள் உள்ள குழித்தட்டுகள் ஏற்றது.

நிழல்வலை

நாற்றுக்களை நிழல்வலை குடில் அமைத்து வளர்க்கும் போது செடி வளர தேவையான சூழலை ஏற்படுத்துகிறது. இந்நிழல்வலை உட்புகும் ஒளியினைக் கட்டுப்படுத்துவதால் நாற்றுக்கள் வளர ஏதுவான சூழ்நிலை கிடைக்கிறது.

நைலான் வலை

குழித்தட்டு நாற்றங்காலில் நான்கு புறமும் நைலான் வலை கொண்டு பாதுகாப்பதன் மூலம் நாற்றுக்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வளர்கின்றன.

குழித்தட்டு ஊடகம்

நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்கழிவினை மண்ணிற்குப்பதில் ஊடகமாக பயன்படுத்தலாம். மண்புழு உரம் பெர்லைட் மற்றும் பீட்மாஸ் போன்ற ஊடகங்களைவிட நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்கழிவினை மண்ணிற்குப்பதில் ஊடகமாக பயன்படுத்தலாம். தென்னை நார்கழிவு அதிகப்படியான நீரை வடித்து தேவையான ஈரப்பதத்தை தந்து சீரான வேர் வளர்ச்சிக்கு உதவுகிறது.

நாற்றுக்கள் உற்பத்தி முறை

* தேர்வு செய்யப்பட்ட காய்கறி விதைகளை சூடோமோனாஸ் பூஞ்சாண கொல்லியினால் (10/ கிராம்/ கிலோ விதைகள்) விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

* குழித்தட்டுகளை பதப்படுத்தப்பட்ட தென்னை நார்கழிவினை கொண்டு நிரப்பி 1-2 செ.மீ  ஆழத்தில் விதைகளை குழிக்கு ஒரு விதை என்ற அளவில் இட்டு மறுபடியும் தேனை நார்கழிவு மூலம் விதைகளை மூடிப், பின்னர் குழித்தட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வெளிச்சம் புகாதவாறு பாலித்தீன் தாழ் கொண்டு இந்து நாட்களுக்கு மூடி வைக்க வேண்டும்.

* ஐந்தாம் நாள் விதை முளைத்து வெளிவர ஆரம்பிக்கும் போது இத்தட்டுகளை  எடுத்து நிழல்வலை குடிலில் அடுக்கிவைத்து பிறகு தினமும் காலை மாலை ஆகிய இரு நேரமும் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும்.

* வேரழுகல் நோய் இருப்பின் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1 கிராம்/லிட்டர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

* தக்காளி, மிளகாய் போன்ற செடிகளின் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் இருப்பின் இமிடோகுளோர்பிட் 0.5 மி.லி/ லிட்டர் அல்லது டிரையசோபாஸ் 1.5 மி.லி/ லிட்டர் அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

நடவுக்கான பருவம்

நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை சரியான நேரத்தில் எடுத்து நடவு செய்யவேண்டும்.

தக்காளி 25-30 ஆவது நாட்கள், கத்தரி, மிளகாய் மற்றும் குடைமிளகாய் போன்றவற்றை 35-40 வது நாட்கள் மற்றும் தர்பூசணி 12-15 வது நாட்களில் நடவு வயலில் நடவு செய்ய வேண்டும்.

குழித்தட்டு நாற்றங்காலில் நன்மைகள்

* ஒரே சீரான வளர்ச்சி உடைய நாற்றுக்கள் உருவாகின்றன.

* வேரின் வளர்ச்சி சீராக, நன்றாக இருப்பதாலும் நாற்றுக்களை நடவு வயலுக்கு  கொண்டு செல்லும்போது அதிர்ச்சி இல்லாததாலும், நடவு வயலில் நடவு செய்த பின் போக்கு நாற்று நடவேண்டும் அவசியமில்லை.

* நாற்றுகளை நடவு வயலில் நட்ட பின்பு துரிதமாக உயிர் பெற்ற வளர்கின்றன. 

* நடவு வயல் தயார் செய்யக் காலதாமதம் ஆகும் நிலையில் குழித்தட்டு நாற்றங்கால் சரியன முறை ஆகும்.

* பருவமற்ற காலங்களிலும் நாற்றுக்கள் உற்பத்தி செய்ய முடியும்.

* பாதுகாப்பான சூழலில் நாற்றுக்களை வளர்ப்பதால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களை கண்காணிப்பது எளிது.

K.Sakthipriya
Krishi Jagran       

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)