மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 August, 2021 10:34 AM IST

நெல் பயிரில் சான்று விதைப்பண்ணை அமைத்து, தரமான பிற இரக கலப்பில்லாத, இனத்தூய்மை பெற்ற விதைகளை உற்பத்தி செய்து அதிக லாபம் ஈட்டமுடியும் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

விதைச்சான்று நடைமுறைகள் (Seed certification procedures)

நெற் பயிரில் விதைச்சான்று நடைமுறைகளை கீழ்கண்டவாறு பின்பற்றலாம்.
சான்று விதை உற்பத்தியில், மத்திய அரசால் அறிக்கை செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்குட்பட்ட நெல் இரகங்களான ADT 51, ADT 53, Rice VGD 1, TKM 13 போன்றவற்றை அவரவர் பகுதி மற்றும் பருவத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும்.

கட்டணம் (Fee)

விதைப்பண்ணைப் பதிவினை உரிய விதைப் பறிக்கை படிவத்தில், 3 நகல்களில் பூர்த்தி செய்து, ஒரு ஏக்கருக்கு வயலாய்வு கட்டணமாக ரூ.60/ம்- விதைப்பறிக்கை கட்டணமாக ஒரு அறிக்கைக்கு ரூ.25/ம் செலுத்த வேண்டும்.
இதேபோல், விதைப் பரிசோதனை கட்டணமாக ஒரு குவியலுக்கு ரூ.30/-ம் செலுத்திவிதைச்சான்று உதவி இயக்குநர், சேலம் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

விதைப்பண்ணைப் பதிவு (Seed farm registration)

  • நெல் பயிர் பூப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக விதைப்பண்ணை பதிவு செய்ய வேண்டும்.

  • விதைப்பண்ணை வயல் நடவின் போது சான்று நிலையாக இருப்பின் 8 அடிக்கு 1 அடியும், ஆதார நிலையாக இருப்பின் 4 அடிக்கு 1 அடியும் பட்டம் விட்டு நடவேண்டும்.

  • விதைப்பண்ணை வயலுக்கு அருகில் 3 மீட்டர் இடைவெளிக்கு, நான்கு பக்கங்களிலும் இதர இரகம் சாகுபடி செய்யாமல் பயிர் விலகு தூரம் கடைபிடிக்க வேண்டும்.

  • நெல் விதைப்பண்ணை பூப்பருவத்தின் போது ஒரு முறையும், கதிர் முதிர்வின் போது ஒரு முறையும் விதைச்சான்று அலுவலரால் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு, கலவன் கணக்கீடு செய்யப்படும்.

  • எனவே கலவன் அகற்றி விதைப் பண்ணையைப் பராமரிக்க வேண்டும். 90 சதவிகிதம் பணிகள் வைக்கோல் நிறம் அடைந்தவுடன், அறுவடை செய்து, நன்கு சுத்தமான உலர் கலத்தில் அடித்து, ஈரபதம் 13 சதவீதத்திற்குள் வரும்படி நன்கு காய வைத்து சுத்தம் செய்து, புதிய சாக்கு பைகளில் ஒரே அளவில் நிரப்பி விதைச்சான்று அலுவருக்கு விதைச்சுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

  • நெல் குவியல் உரிய விதைச்சான்று அலுவலரால் ஆய்வு செய்யப்பட்ட பின், மூட்டைகளில் சீலிடப்பட்டு, அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு உரிய சுத்தி அறிக்கையுடன் அனுப்பப்படும்.

  • சுத்தி நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டு, சுத்தம் செய்து, விதை மாதிரி எடுக்கப்பட்டு, விதைப் பரிசோதனை நிலையத்திற்கு விதை மாதிரி அனுப்பப் பட்டு, பகுப்பாய்வு முடிவுகள் பெறப்படும்.

  • விதை மாதிரிகள் அனைத்து காரணிகளான முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்தத்தன்மை மற்றும் பிற இரக கலவனில் தரமானதாக இருக்கும் பட்சத்தில், விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவல கத்தில் உரிய சான்றட்டைகள் பெறப்பட்டு, பகுப்பாய்வு முடிவு பெற்ற நாளில் இருந்து, இரண்டு மாதத்திற்குள் சான்று செய்யப்படும்.

அதிக லாபம் ஈட்டலாம் (Can make more profit)

இவ்வாறு நெல் சான்று விதைப்பண்ணைகளை அமைத்து, விவசாயிகள் அதிக லாபம் பெறுவதுடன், வேளாண்த் துறையின் மூலம் வழங்கப்படும் துறையின் உற்பத்தி மானியம் பெற்று, கூடுதல் லாபம் பெற்று பயனடையலாம். அரசின் கொள்முதல் மானியம் பெற்று, விவசாயிகள் அதிகமான லாபம் ஈட்ட முடியும்.

தகவல்
தி.கௌதமன்
விதைச்சான்று உதவி இயக்குநர்

மேலும் படிக்க...

இந்தியாவில் செய்யக்கூடிய 3 முக்கியமான உள்நாட்டு சாகுபடி முறைகள்

English Summary: Produce certified seeds and make more profit in paddy crop!
Published on: 15 August 2021, 03:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now