தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் உளுந்து மற்றும் பச்சைப் பயறு (Green Gram) கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆட்சியர் ம.கோவிந்த ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:
நிகழாண்டு(2020-21) ராபி பருவத்தில் மீண்டும் பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து மற்றும் பச்சைப் பயறு கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் தஞ்சாவூர் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், சாக்கநாடு ஆகிய பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உளுந்தும் பச்சைப்பயறும் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் இலக்கு (Purchase target)
இதன் ஒருபகுதியாக உளுந்து 140 மெட்ரின் டன்னும், பச்சைப்பயறு 160 மெட்ரிக் டன்னு
ம் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தரம் (Quality)
உளுந்து மற்றும் பச்சைப் பயறுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து, காய வைத்து அயல் பொருள்கள் கலப்பின்றி கொண்டு வர வேண்டும்.
விலை (Price)
இவ்வாறு நன்கு காய வைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ.60 வீதமும், பச்சைப் பயறு கிலோவுக்கு ரூ.71.96 வீதமும் கொள்முதல் செய்யப்படும்.
விளைபொருட்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்
தஞ்சை மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு ஏப்ரல் 1ம் தேதி முதல் 90 நாள்களுக்கு கொள்முதல் செய்யப்படும்.
தேவையான ஆவணங்கள் (Documents)
இத்திட்டதின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல் ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு புத்தக நகல் ஆகிய ஆவணங் களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகலாம்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
இயற்கை பூச்சி விரட்டியான மோர்க்கரைசல் தயாரிப்பது எப்படி?