தருமபுரியில் குறைந்த பட்ச ஆதார விலையில் துவரை கொள்முதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
துவரைக் கொள்முதல் (Purchase of Tuvara)
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
-
விவசாயிகள் உற்பத்தி செய்த பயறு வகைகளை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-
நிகழாண்டில் காரீஃப் பருவத்தில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலையில் துவரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.இந்த மாவட்டத்தில் 11,418 ஹெக்டேர் பரப்பளவில் துவரை சாகுடி செய்யப்பட்டுள்ளது.
-
தற்போது துவரை சாகுபடி அறுவடை (Harvesting) எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்நிலையில், தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமாக 300 டன்னும், பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக 240 டன் (Ton) னும், அரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக 120 டன்னும் துவரை கொள்முதல் செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது.
-
துவரைக்கு நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருக்கும் வகையில் விவசாயிகள் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு காய வைத்து கொண்டு (Dry) வர வேண்டும்.
-
இந்தத் தரமுள்ள துவரை கிலோ ஒன்றுக்கு ரூ.60 வீதம் கொள்முதல் செய்யப்படும்.
-
இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
-
இந்த கொள்முதல், வரும் மார்ச் 14ம் தேதி வரை நீடிக்கும்.
-
எனவே இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் (Passbook) ஆகிய விவரங்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கடைங்களை அணுகிப் பதிவு செய்து தங்களது துவரையை விற்பனை செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி-ஈஷா விவசாய இயக்கம் ஏற்பாடு!
குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டித் தரும் சிறு தானியங்கள்!
பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய விவசாயத்தை உருவாக்க வேண்டும்!