திண்டுக்கல் மாவட்டத்தில் இயந்திர நெல் நடவு செய்ய ரூ.5 ஆயிரமும், விவசாய ஆர்வலர் குழுவுக்கு ரூ.6 ஆயிரம் மானியமும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இழப்பு ஏற்பட வாய்ப்பு (Chance of loss)
பொதுவாக நெல் நடவு முறையால் சில நேரங்களில் இழப்பு ஏற்படும். அதேநேரத்தில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பட்சத்தில் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
பாதகங்கள் (Disadvantages)
வேலை ஆட்கள் பற்றாக்குறையால் 10 நாட்களில் முடிய வேண்டிய நாற்று நடவு பணி 20 நாட்களுக்கும் மேலாகலாம். இதனால் நேரமும், தண்ணீரும் வீணாகிறது.
சாதகங்கள் (Advantages)
இயந்திர நடவு முறையில் வயலை சமப்படுத்தி, நிலத்தை பவர் டிரில்லர் மூலம் உழவு செய்தால் நடவு செய்ய எளிதாக இருக்கும். ஒரு ஏக்கருக்கு 80 தட்டுகள் வீதம் நாற்று விட வேண்டும். அதனை 15 முதல் 18 நாட்கள் வளர்ந்த பின்னர் இயந்திர நடவு முறையில் நடவு செய்யலாம்.
இயந்திர நடவின் நன்மைகள் (Advantages of mechanical planting)
-
இம்முறையில் பயிர் வளையாமல் நேராக, வரிசையாக வளரும்.
-
விரைவாகத் துார் கட்டவும் முடியும்.
-
இந்த முறையில் நீர் பராமரிப்பும், நோய் தாக்குதலும் குறைவு.
-
சாதாரண நடவு முறையைக் காட்டிலும் அதிக மகசூல் கிடைக்கும்.
மானியம் (Subsidy)
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.5 ஆயிரம், விவசாய ஆர்வலர் குழுவினருக்கு ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வேளாண் அலுவலகத்தை அணுகலாம் என திண்டுக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை கூறினார்.
இடுபொருள் மானியம் (Input subsidy)
இதேபோல், ஒரு ஹெக்டேர் பரப்பளவில் துவரை பயிர் செயல் விளக்கத் திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு, தேவையான இடுபொருள் மானிய விலையில் வழங்கப்படும் என எலச்சிபாளையம் வேளாண் உதவி இயக்குனர் லோகநாதபிரகாசம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
ஊடுபயிர் (Intercropping)
எலச்சிபாளையம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை பயிரிடும்போது, ஊடுபயிராக இரண்டு அல்லது மூன்று வரிசைகளில் துவரை பயிர் சாகுபடி செய்கின்றனர். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், துவரை செயல் விளக்கத் திடல் அமைக்க மானிய வழங்கப்படுகிறது.
ரூ.5,000 மானியம் (Rs. 5,000 Subsidy)
இறவைப் பயிராக, தனிப்பயிராக, துவரை ஐ.சி.பி.எல்., 85063 ரகம் பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம். செயல் விளக்கத் திடல் அமைப்பவர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதை, உரம் மற்றும் இதர இடுபொருட்கள் 5,000 ரூபாய் வரை மானிய விலையில் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
PMFBY: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
PMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு!!
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் ஐந்து ஆண்டு கால சாதனை : ரூ. 90,000 கோடி காப்பீடு வழங்கல்!!