Horticulture

Tuesday, 23 April 2019 08:23 AM

பெரும்பாலும் பெண்களை பூக்களுடன் ஒப்பிட்டு கூறுவார், பெண் என்பவள் பூவை போல மென்மையானவள் என்று. தலையில் பூக்கள் சூடி வந்தாலே பெண் தனி அழகு பெறுகிறாள்.  எந்த ஒரு விஷேஷங்களிலும் பெண்கள் இருக்கும் இடத்தில பூக்கள் இல்லாமல் இருக்காது. பூவை மங்களகரமான விஷயமாக பார்க்கிறார்கள். பெண்கள் தினமும் பூக்கள் சூடிக்கொண்டாள் லட்சுமி கடாக்ஷம் தோன்றும் என்பார்கள். மல்லி என்றாலே சிறப்பு தான் ஆனால் ஏன் இந்த மதுரை  மல்லிக்கு  மட்டும் அதிக சிறப்பு உள்ளது. வாருங்கள் பார்க்கலாம்.

மதுரைக்கு சிறப்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் , அழகர் கோவில், மற்றும் மதுரை மல்லி. மதுரை என்றாலே மல்லி, மல்லி என்றாலே மதுரை.

அப்படி என்ன சிறப்புகிழக்கிலிருந்து வரும் கொடைக்கானல் கற்றும் , மேற்கிலிருந்து வரும் ராமேஸ்வர கடல் கற்றும் இதமான இயற்கை காற்றாக அமைந்து நல்ல வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது. மேலும் மண்ணின் தன்மை சல்பர் கலந்த வண்டல் மண்ணாக இருப்பதால மல்லி நல்ல வளர்ச்சி பெறுகிறது.  மற்ற மல்லி செடிகள் மூன்றில் இருந்து முன்றரை அடி  வளரும் ஆனால் மதுரை மல்லி  நான்கில் இருந்து நான்கரை அடி வளரும். இந்த மல்லி தடிமனாக இருப்பதால் தாமதமாகவே விரிகிறதுஇதனால் மல்லி சீக்கிரம் வாடுவதில்லை. மேலும் இதன் வாசனை அதிக நேரம் வரை இருப்பதால் இது இன்னும் சிறப்பு பெறுகிறது. மற்ற மல்லி 1 நாள் மட்டுமே  தாங்கும் ஆனால் மதுரை மல்லி நாள் வரை வாடாமல் இருக்கும். இந்த மதுரை மல்லி பக்கத்து ஊரான ஏலியார்பட்டி, சிலுக்குவார்பட்டி, மாலப்பட்டி, கொண்டரோடு, பாலையம்பட்டி, ஆகிய ஊர்களில் விவசாயம் செய்யப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ஆயிரம் ஏக்கருக்கு பதினோரு டன் விளைச்சல் பெறுவதால்  மற்ற உலக நாடுகளான லண்டன், சிங்கப்பூர், மலேசியா, யூஎஸ்யே,மேலும் பல நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்படுகிறது. குண்டு மல்லி மதுரை மல்லி. 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)