Horticulture

Wednesday, 02 February 2022 10:14 AM , by: Elavarse Sivakumar

குறைந்த செலவில், சோளப்பயிர் அறுவடையை முடிக்க, அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என, வேளாண் பொறியியல் துறை அறிவித்துள்ளது. இதனை வேளாண் துறை மூலம் விவசாயிகள் வாடகைக்குப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில், மானாவாரி சாகுபடியில், சோளம் அதிகம் பயிரிடப்படுகிறது. குறைந்த செலவில், தீவனம் தயாரிக்க, சோளம் சாகுபடியே சிறப்பானத் தேர்வு. எனவே இந்த மாவட்டத்தில் ஏராளமான சோளம் சாகுபடியைத் தேர்வு செய்கின்றனர். தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவத்தில், கனமழை பெய்ததால், மானாவாரி சோளப்பயிர், வழக்கத்தை விட உயரமாக வளர்ந்துள்ளது.

தற்போது விவசாயிகள் அறுவடையைத் துவக்கத் தயாராகி வருகின்றனர்.
வேலை உறுதித்திட்ட பணிகளால், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் வளர்ந்து நிற்கும் சோளத்தை அறுவடை செய்ய வழியில்லாமல் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.

ரூ.400 வாடகை

இதனைக் கருத்தில்கொண்டு,விவசாயிகளின் இக்கட்டான நிலையைப் போக்கும் வகையில், வேளாண் பொறியியல் துறை சார்பில், சோளத்தட்டு அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கும் திட்டம் மீண்டும் துவங்கியுள்ளது.
டிராக்டரில் பொருத்திய, அறுவடை இயந்திரம் வாயிலாக, ஒரு ஏக்கர் சோளப்பயிரை, ஒன்றரை மணி நேரத்தில் அறுவடை செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் கூறுகையில் ஒரு மணிக்கு, ரூ.400 வாடகையில், சோளப்பயிர் அறுவடை இயந்திரத்தை பயன்படுத்தலாம்.

திருப்பூர் கோட்டத்தில் தாராபுரம் மற்றும் உடுமலையில், தலா ஒரு இயந்திரம் பயன்பாட்டுக்கு உள்ளது. சோளப்பயிர் அறுவடை செய்ய வேண்டிய விவசாயிகள், அந்தந்த உதவி பொறியாளர் அலுவலகத்தில், பதிவு செய்து, எளிய முறையில் அறுவடை செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

ஒமிக்ரான் வேகமாக குறையும்: அமெரிக்க அறிவியலாளர் நம்பிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)