மண்வளம்
மண் என்பது உலகின் இயற்கை ஆதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளமாகும். ஒரு அங்குல மண் உருவாவதற்கு 300-1000 வருட காலம் தேவைப்படுகிறது. ஒரு செடி செழுமையுடன் வளர்ந்து அதிக மகசூல் தர வேண்டுமானால் அதற்கு ஏழு அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவை 1.சூரிய ஒளி 2.கரியமில வாயு 3.ஆக்ஸிஜன் 4.தண்ணீர் 5.தாது உப்புகள் 6.மண் பிடிமானம் மற்றும் 7.மண்வெப்பம் இதில் முதல் மூன்றும் சூரியன், காற்று மூலம் பயிருக்கு கிடைத்துவிடுகிறது. மற்ற ஐந்து தேவைகளும் மண்ணிலிருந்து கிடைக்க கூடியது. அதிகபடியான மழை, காற்று மற்றும் வெப்பம் ஆகிய தாக்குதல்களால் மண்ணிலுள்ள தாதுக்கள் நீக்கப்பட்டு மண் குறைவு ஏற்படுகிறது. எனவே மண் வள மேலாண்மை அதிக மகசூல் பெறவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
தமிழ்நாட்டின் மண் பிரிவுகள்
1- செம்மண் (65 சதவீதம்)
2- கரிசல் மண் (12 சதவீதம்)
3- செம்பொறை மண் (3 சதவீதம்)
4- கடற்கரை மண் (7 சதவீதம்)
செம்மண் வகைகள்
1- இரு பொறை செம்மண் (30 சதவீதம்)
2- வளம் குறைந்த செம்மண் (6 சதவீதம்)
3- மணற்பாங்கான செம்மண் (6 சதவீதம்)
4- ஆழம் குறைந்த செம்மண் (2 சதவீதம்)
5- ஆழமான இருபொறை செம்மண் (8 சதவீதம்)
வளமான மண்ணின் தன்மைகள்
1- செடியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அடிப்படை ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் செடிக்கு கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது.
2- வளமான மண், போரான், கினோசின், கோபால்ட், செம்பு, இரும்புச்சத்து, மாங்கனிஸ், மெக்னிஸியம், மாலிப்பிடினம், கந்தகம் மற்றும் துத்தநாக தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்ககூடிய நிலையில் அமைந்திருக்கும்.
3- வளமான மண்ணில் அங்ககப் பொருள் இருப்பதனால் மண்ணின் அமைப்பு மேம்படுவதுடன், ஈர பதத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது.
4- மண்ணின் கார அமில தன்மை 6.0 முதல் 6.8 வரை இருப்பின் அவை வளமான மண்ணாகும்.
5- மண் சரியான அமைப்புடன் நன்கு வடியக் கூடிய நிலையில் அமைந்துள்ளது.
6- வளமான மண்ணில் பயிர் வளர்ச்சிக்கு நன்மை செய்யும் பல்வேறு நுண்ணுயிர்கள் காணப்படும்
7- வளமான மண் ஆழமான மண் அமைப்புடன் இருக்கும்.
k.sakthipriya
krishi jagran