Horticulture

Monday, 04 April 2022 10:19 AM , by: Elavarse Sivakumar

பட்டு விவசாயத்தை மேம்படுத்த அரசு சார்பில் பட்டுப்புழு வளர்ப்பு குடிலுக்கு ரூ.1.20 லட்சம் மானியம் வழங்கப்படுவதால், அதனைப் பட்டு விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பட்டு வளர்ச்சி துறையின் திருச்சி உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பலூர் தொழில்நுட்ப சேவை மையத்திற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முதல் பரிசாக கொடுக்கூர் பட்டு விவசாயி செல்வகுமாருக்கு ரூ.25 ஆயிரமும், 2-ம் பரிசாக வேம்புக்குடி விவசாயி கலியமூர்த்திக்கு ரூ.20 ஆயிரமும், மூன்றாம் பரிசாக கண்டிராதித்தம் விவசாயி ஜெயபாலுக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது.

பின்னர் விழாவில் ஆட்சியர் பேசியதாவது:-

தமிழக அரசு பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு நடவு மானியம் ரூ.10 ஆயிரத்து 500-ம், புழு வளர்ப்பு குடிலுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், புழு வளர்ப்பு தளவாடங்களுக்கு ரூ.52 ஆயிரத்து 500-ம் வழங்கி வருகிறது. மேலும், பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் தற்போது பட்டுக்கூடுகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.750-க்கு மேல் லாபம் கிடைப்பதால், விவசாயிகள் ஆர்வமுடன் அதிகமாகப் பயிரிட்டுள்ளனர்.

இதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதால், இதனை அரியலூர் மாவட்ட பட்டு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

கோடை வெயிலைக் கொளுத்திவிட- தினமும் 4 புதினா இலைகள்!

லட்சம் ரூபாயை எட்டிய பஞ்சு விலை- ஜவுளித்துறை முடங்கும் அபாயம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)