Horticulture

Friday, 29 April 2022 02:00 PM , by: Elavarse Sivakumar

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்களுக்கு ​​விவசாய நிலத்தில் நீர்பாசன வசதிக்காக பிவிசி பைப் அமைக்க திட்டத்தொகையில் 50 சதவிகிதம் மான்யம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

இது தொடர்பாக கடலூர் ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலத்தில் பி.வி.சி. பைப் (PVC Pipe) அமைத்தல் மற்றும் விவசாய பம்பு செட்டிற்கு புதிய மின் மோட்டார் (ELECTRIC MOTOR) வாங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

விவசாய நிலத்தில் நீர்பாசன வசதிக்காக பிவிசி பைப் அமைக்க திட்டத்தொகையில் 50 சதவிகிதம் மானியம் அதிகபட்சம் ரூ.15,000/ வழங்கப்படும். அதேபோல், விவசாய பம்பு செட்டிற்கு புதிய மின் மோட்டார் வாங்க திட்டத்தொகையில் 50 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.10,000/-மானியமாக வழங்கப்படும்.

இந்தத் திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ள ஆதிதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சிறு, குறு விவசாயிகள் தாட்கோ இணையதள வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • சாதி சான்று

  • குடும்ப ஆண்டு வருவாய் சான்று ஆதார் அடையாள அட்டை

  • பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலம் பெற்ற விலைப்புள்ளி

  • நிலத்திற்கான ஆவணங்கள் போட்டோ

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் மேலேக் கூறிய ஆவணங்களுடன், ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்தவராக இருப்பின் HYPERLINK "http://www.application.tahdco.com/"www.application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும், பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவராக இருப்பின் HYPERLINK "http://www.fast.tahdco.com/"www.fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்கள் பெற மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, (2-ம் தளம்) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலுார்-1 ஆல்பேட்டை, (தொலைபேசி எண்.041/ 221087) என்ற முகவரியில் தொடர்புகொண்டு விவரங்கள் பெற்று பயன்பெற்றுகொள்ளுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கால்சியம் குறைபாடு!

பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)