இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 23 January, 2021 8:57 PM IST
Credit : Agfax

திருநெல்வேலியில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க கூடுதல் மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் எஸ்.என். திலீப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை, இதர பழ மரங்கள், மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

நீர் மேலாண்மைத் திட்டம் (Water Management Scheme)

இந்த பயிர்களுக்கு நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், துணை நீர் மேலாண்மைச் செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

அதாவது பாசன குழாய்களை நிறுவுதல் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற துணை நீர் மேலாண்மை பணிகளுக்காகவும் அரசு மானியம் வழங்கி வருகிறது

எனவே பயன்பெற விரும்பும் விவயாகிள், நுண்ணீர் பாசன திட்டத்துக்காக இணையத்தில் பதிவு செய்யும் போது, இத்திட்டத்திற்காகவும் பதிவு செய்ய வேண்டும்.

50% மானியம் (50% Subsidy)

மேற்கண்ட பணிகளுக்கான மானியம் நுண்ணீர் பாசன முறையினை பின்பற்ற முன்வரும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

  • குழாய் கிணறு, துணை கிணறு அமைக்க 50 சதவீத மானியம், அதாவது 25 ஆயிரத்துக்கு மிகாமல் வழங்கப்படும்.

  • ஆயில் மோட்டார். மின்மோட்டார் நிறுவுவதற்கு 50 சதவீத மானியம் ரூ.15 ஆயிரத்துக்கு மிகாமல் வழங்கப்படும்.

  • பாசன குழாய்கள் அமைக்க பயனாளிக்கு அதிகபட்சம் ஒரு ஹெக்டேருக்கு ஐம்பது சதவீத மானியம்கும் 10ஆயிரத்துக்கு மிகாமல் வழங்கப்படும்.

  • தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க 50 சதவீத மானியம் அதாவது 1 கன மீட்டருக்கு ரூ.350 வீதம் அதிகபட்சமாக ரூ.40,000 வரை வழங்கப்படும்.

  • மேலும் நுண்ணீர் பாசனம் அமைத்திட தற்போது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

  • நிலத்தில் பட்டா

  • சாகுபடி செய்யும் பயிர் பரப்பின் சர்வே எண்கள் 

  • அடங்கல்

  • வயல் வரைபட நகல்

  • குடும்ப அட்டை

  • ஆதார் அட்டை

  • வங்கிக் கணக்கு புத்தகம்

  •  பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

ஆகியவற்றுடன் அருகில் உள்ள தோட்டக்கலைத்துறைற உதவி இயக்குநர் அலுலகத்தைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இயற்கை விவசாயம் செய்ய 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம்!

நெல்லின் ஈரப்பதத்தை குறைக்க வந்துவிட்டது நவீன இயந்திரம்! தஞ்சையில் செயல்முறை விளக்கத்துடன் பரிசோதனை!

தேயிலையில் கொப்பள நோய் தாக்குதல்- தடுக்க எளிய வழிகள்!

English Summary: Rs 40,000 subsidy for drip irrigation for horticultural crops!
Published on: 23 January 2021, 08:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now