தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்வோருக்கு மரக்கன்று (Sapling) விற்பனை செய்து வருகிறது திருச்சி மாவட்ட தோட்டக்கலைத்துறை.
மரக்கன்று விற்பனை (Sapling Sale)
திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டார கஞ்சநாயக்கன்பட்டியில் தோட்டக்கலைத் துறையும், மலைப்பயிர்கள் துறையும் இணைந்து விவசாயிகளுக்கு உதவுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நர்சரி பண்ணை (Nursery Farm)
இதன் ஒருபகுதியாக, நர்சரி பண்ணை (Nursery Farm) அமைத்து விதைகள், கன்றுகள், உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் பப்பாளிக்கன்றுகளும், நட்டுப் பராமரிக்கப்படுகின்றன.
விதைகள், கன்றுகளை தேவையான விவசாயிகளுக்கு வழங்கி, சாகுபடிக்கு தேவையான ஆலோசனைகளையும், பிற உதவிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் நர்சரி பண்ணைக்காக புதிய டிராக்டர் இயந்திரம் வாங்கப்பட்டு, மேம்பாட்டுப் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்துள்ளது.
பசுமைக்குடில் அமைத்து நர்சரி பண்ணைகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு சொட்டுநீர்ப் பாசனத்தில் பப்பாளி கன்று, தட்டைப்பயறு விதை, கொய்யாக் கன்று உற்பத்தி, மிளகாய் நாற்றங்கால் உற்பத்தி ஆகியவையும் நடைபெறுகிறது.
மேலும் படிக்க...
மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!
1.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட விநோதமான ஆடு! அசர வைக்கும் வசீகரம்!
ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யக் காலக்கெடு- முழு விபரம்!