இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 10 June, 2019 4:09 PM IST

விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான்தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.

பயிர் விலகு தூரம்

விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 3 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும். 

விதைப்பு முன் விதை நேர்த்தி

விதைகளை 250 முதல் 300 மி.கி. துத்தநாக சல்பேட்டு உப்பினை 10 % மைதா கஞ்சி (ஒரு கிலோவிற்கு 250 முதல் 300 மி.லி) மற்றும் அரப்பு இலைப் பொடி அல்லது மண்புழு உரம் (ஒரு கிலோவிற்கு 300 கிராம்) கொண்டு முலாம் பூசுவதால் வயல்வெளி முளைப்புத் திறன் அதிகமாகும்.

விதைகளை 5 % ஈர மணலில் 24 மணி நேரம் வைத்து பின் திரம் என்ற பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோவிற்கு 2.5 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைப்பதால் வயல்வெளி தழைத்தல் அதிகமாகும்

அறுவடை

விதைகள் பூத்த 27-30 நாட்கிளல் வினையியல் முதிர்ச்சி அடைகின்றன.

செடிகளை ஒரே முறையாக அறுவடை செய்து வெய்யிலில் நன்கு உலர வைக்க வேண்டும்.

விதைகளைப் பிரித்தெடுத்தல்

செடிகளை வளையும் மூங்கில் குச்சி கொண்டு அடித்து விதைகளைப் பிரித்தல் வேண்டும்

விதைச் சுத்திகரிப்பு

விதைகளை 14/64” (5.6 மி.மீ) அல்லது (12 மி.மீ) வட்ட கண் அளவு சல்லடைகளைக் கொண்டு தரம் பிரித்தல் வேண்டும்

உலர்த்துதல்

விதைகளை 7 முதல் 8 சத ஈரப்பதத்திற்கு உலர வைத்தல் வேண்டும்.

விதை நேர்த்தி

விதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பென்டாசிம் மருந்தினை 5 மி.லி நீரில் கலந்து நேர்த்தி செய்து பின் நிழலில் உலர்த்த வேண்டும். (அல்லது)

விதைகளை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் ஹாலோஜன் கலவையினை (கால்சியம் ஆக்ஸி குளோரைடு, கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்புத் தூள் 5:4:1 என்ற விகிதத்தில்  கலந்த கலவை) உலர் கலவையாகக் கலந்து வைக்க வேண்டும்

விதைச் சேமிப்பு

விதைகளின் ஈரப்பத்தினை 10 முதல் 12 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப் பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்

விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 10 சதமாகக் குறைத்து பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய/இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.

விதையின் ஈரப்பதத்தினை 7 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்கும் சேமித்து வைக்கலாம்.

 

k.sakthipriya

krishi jagran 

English Summary: seed, pulses, oil seeds: Soyabeans cultivation and harvesting steps
Published on: 10 June 2019, 04:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now