Horticulture

Saturday, 31 October 2020 07:51 AM , by: Elavarse Sivakumar

விருதுநகர் மாவட்டத்தில், உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக ஆட்சியர் ரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • விருதுநகர் மாவட்டத்திற்கு பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் தனியார் உரக்கடைகளிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

  • உர விற்பனையாளர்கள் தங்கள் உரக்கடைகளில் அறிவிப்பு பலகை வைத்து கண்டிப்பாக உரங்களின் இருப்பு விபரங்களை அறிவிப்பு பலகையில் பதிவு செய்து விவசாயிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

  • நிறுவனம் வாரியாக உரங்களின் விலைப் பட்டியலை அறிவிப்பு பலகையில் பதிவு செய்ய வேண்டும்.

  • அரசு நிர்ணயித்துள்ள அதிக பட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது.

    விவசாயி அல்லாதோருக்கு உரங்களை விற்கக் கூடாது.

  • விற்பனை முனையக் கருவி மூலம் பட்டியலிடப்பட்டு விற்பனை மேற்கொள்ள வேண்டும்

    விருதுநகர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு பெறப்பட்ட சலுகை விலை மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு பரிவர்த்தனை செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது.

  • ஒரே விவசாயிக்கு அதிகமாக உரமூடைகள் விற்பனை செய்ய கூடாது.

    உர இருப்பு பதிவேடுகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.

  • உரங்கள் விற்பனை செய்யும் போது கூடுதலாக பிற உரங்களை வாங்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது.

  • உரம் வாங்க செல்லும் விவசாயிகள் ஆதார் அட்டையை கண்டிப்பாக கொண்டு சென்று விற்பனை முனையக் கருவியில் இல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

  • தேவைக்கு மட்டுமே யூரியா உரம் பயன்படுத்தப்பட வேண்டும்.

    கூடுதலாக யூரியா உரம் பெறுவோர் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  • இந்த வழிமுறைகளை பின் பற்றாத விற்பனையாளர்கள் மீது உரக் கட்டுப்பாட்டு சட்டம் பாகன்படி நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும், அவர்களின் உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

இந்த ஆண்டு மக்காச்சோளத்திற்கு என்ன விலை கிடைக்கும்? TNAUவின் கணிப்பு

பாழ்பட்ட நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றும் 20 வகை விதைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)