சிட்ரிக் அமிலம் நிறைந்த பழமாகக் கருதப்படும், எலுமிச்சை (Lemon) உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொள்ள விரும்புபவர்களுக்காகக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இதில் உள்ள வைட்டமின்கள் B மற்றும் Cயே இதற்கு காரணம்.
நோய் தீர்க்கும் மருந்து (Antidote)
காய்ச்சலுக்கு நலம்பெற எலுமிச்சை ஜூஸ் மிகச்சிறந்தது என்பது சமீபத்திய ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, தொண்டையில் சதை வளர்தல் டான்சில்ட்ஸ்(tonsillitis.)எலுமிச்சை சாறை, தேனுடன் சேர்த்து சாப்பிடுவது, சளியைப் போக்கும் என்று பாரம்பரிய மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பல நன்மை பயக்கும் எலுமிச்சைப்பழத்தை நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து தினமும் ஒரு பழத்தை சாகுபடி செய்ய நாமும் முயற்சி மேற்கொள்ள விருப்பமா? அப்படியானால், உங்களுக்கு இதோ இந்த டிப்ஸ்கள் பயன் அளிக்கும்.
பரிந்துரைகள் (Suggestions)
-
1. கொஞ்சம் கூடுதல் கவனத்துடன், பராமரித்தால், எலுமிச்சை சாகுடி எளிமையான விஷயம்தான்.
-
2. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட முடியும்.
-
3. பயிரிடும்போது, இதற்கான உரத்தை மண்ணுடன் சேர்த்து விதைப்பது நல்லது.
-
4. எலுமிச்சை நன்கு வளர நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் சத்து அதிகளவில் தேவை.
-
5. ஊடுபயிராக எலுமிச்சையைப் பயிரிட்டால் ஒருபோதும் சாபடி செய்ய முடியாது.
-
6.நன்கு சூரியஒளி படும் இடமே எலுமிச்சையைப் பயிரிடச் சிறந்தது.
-
7. அதிகளவிலான உரம் எலுமிச்சைக்கு தேவையில்லை
-
8. கோடை காலங்களில், இருவேளையும் தண்ணீர் பாய்ச்சுவது சிறந்தது.
-
9. அவ்வாறு பாய்ச்சும் தண்ணீர் வடியும் வரைக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
-
10. பயிர் வளர்ந்துவரும்போது, வலுவில்லாத செடிகளை அகற்றிவிட வேண்டியது மிக மிக முக்கியமானது.
11.விலங்குகளின் எலும்பும், வீட்டு சமையல் கழிவுகளையும் கொண்டு தயாரிக்கப்படும் போன் மீல் (Bone Meal) சேர்த்தால், எலுமிச்சை அமோக விளைச்சல் தரும்.
12. வேர்ப்பகுதியில் உள்ள மண்ணில் ஊற்றிய தண்ணீர் நன்கு வடியும் வரை காத்திருக்க வேண்டும். அப்போதுதான், வேரில் நன்கு தண்ணீர் உறிஞ்சப்படுவது உறுதி செய்யப்படும்.
13. butterfly worms தாக்குதல்தான் எலுமிச்சையில் பரவலாக காணப்படும் நோய் ஆகும். இந்த நோயில் இருந்து எலுமிச்சைச் செடிகளைப் பாதுகாக்க, வேம்பு-பூண்டுக்கரைசலைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். அப்போது இந்த நோய்த் தாக்குதலில் இருந்து செடிகளைக் காக்க முடியும்.
பூக்கும் பருவத்தில் இயற்கை மருந்து தயாரிப்பது எப்படி?
போன் மீல் (Bone Meal), சாம்பல், சாணம் ஆகியவற்றை ஒரு பக்கெட்டில் 1:1:1: என்ற விகிதத்தில் போட்டுக் கலக்கவேண்டும். அதனுடன் இரண்டரை பங்கு தண்ணீரைச் சேர்ந்து கலந்து இயற்கை மருந்து தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். சிறிய அளவிலான எலுமிச்சைப்பழங்களுக்கு 4 லிட்டர் தண்ணீரில் இந்த மருந்தைக் கலந்து, தெளிக்க வேண்டும்.
மேலும் படிக்க...
மழையால் வெளியேறும் உரஇழப்பைத் தடுக்க - நைட்ரஜன், பொட்டாசியம் இடவேண்டும்!!
மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!
மினி பட்ஜெட்டில், மெகா வருமானம் தரும் பெண்களுக்கான தொழில்கள்- முழுவிபரம் உள்ளே!