பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 December, 2020 9:08 AM IST
Credit : NoteWorthy

குறுகிய காலத்தில் குறைந்த செலவில் அதிக மகசூல் மற்றும் லாபம் ஈட்ட சிறு தானியங்களை பயிரிட முன்வருமாறு திருப்பூர் விவசாயிகளை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் வேடசாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடைப் பருவத்தில் நெற்பயிருக்குத் தேவைப்படும் அதிகப்பட்டியான நீர்த்தேவையைக் குறைக்கவும், குறுகிய காலத்தில் அதிக மகசூல் மற்றும் லாபம் அடைவதற்கும் சிறுதானியங்களைப் பயிரிடலாம்.

  • அதாவது, கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, குதிரைவாலி, சாமை ஆகியவற்றைப் பயிரிடுவது சிறந்த யுக்தியாகப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

  • இதையொட்டி, காவிரி டெல்டா விவசாயிகளை சிறு தானிய சாகுபடிக்கு ஆற்றுப்படுத்த, மாநில சமச்சீர் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறுதானிய உற்பத்தியை மீள் கொணர்தல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் என்ற தலைப்பில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  • அண்மைக் காலமாக, சிறுதானியங்களுக்கான தேவை அதிகரித்து அதற்கான சந்தை விரிவடைந்து வருகிறது.

  • இதற்குக் காரணம் சிறுதானியங்களிலுள்ள சத்துக்களும், மருத்துவக் குணங் களும் ஆகும்.

  • சிறுதானியங்களை மற்ற பயிர்களுடன் ஒப்பிடு கையில் குறைந்த செலவு, குறைந்த தண்ணீர் மற்றும் குறுகிய காலத்தில் அதிக லாபம் கொடுக்கின்றன.

  • எனவே, சிறுதானிய உற்பத்தியை அனைத்து விவசாயிகளும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, சிறுதானிய உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறன்றன.

  • இத்துடன், சிறுதானிய பயிர்களில் புதிய ரகங்கள் மற்றும் அதற்கான இடுபொருட்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க....

திருச்சியில் மரக்கன்று விற்பனை-தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!

மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யக் காலக்கெடு- முழு விபரம்!

English Summary: Small grains that make more profit at lower cost!
Published on: 18 December 2020, 09:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now