விவசாயிகளைக் பொறுத்தவரை, அவர்களது ரேஷன் அட்டையைப் போன்று, மண் வள அட்டையையும் தவறாது வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், மண் வளம்தான், விவசாயியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணி.இதனைக் கருத்தில்கொண்டு, கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மத்திய அரசால், மண் வள அட்டை இயக்கம், நாடு முழுமையாக துவக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான செலவீனத்தை மத்திய, மாநில அரசுகள் முறையே75:25என்ற அளவில் பகிர்ந்து செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. இருவருட சுழற்சி முறையில் விவசாய களின் நிலங்களில் கீரிட் முறையில் மண்மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வு செய்து முடிவுகள் மண்வள அட்டை வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.
பயிர் சாகுபடி உயர்விளைச்சல் பெற்றிட தழைசத்து, மணிசத்து, சாம்பல் சத்து மற்றும் 20வகையான நுண்ணூட்ட சத்துகள் தேவைப்படுகின்றன. மண்பரிசோதனை படி அவரவர்நிலத்தின் சத்துகளின் இருப்பு விபரத்தை அறிந்து கொள்ளவும் சீர்திருத்த வழி முறைகளை தெரிந்து கொள்ள இந்த அட்டைபயனுள்ளதாக இருக்கும்
சமசீர்ரான உரங்கள் இடுவதன் முலம் மகசூல் கணிசமாக உயரும் விவசாய களின் வருமானமும் அதிகரிக்கும். இதனால் தேவைக்கேற்ப உரம் இடுவதன்முலமாக உரத்திற்கான செலவும் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக இருக்கும்.எனவே ஒவ்வொரு விவசாயிகளும் தங்களுடைய ஆதார் அட்டை,குடும்ப அட்டை போல மண் வள அட்டையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
எனவே இதுவரை மண்மாதிரி ஆய்வு செய்யாத விவசாயிகள் அவசியம் ஆய்வு செய்து மண் வள அட்டை வாங்கிட முயற்சிப்போம். மண்வளத்தை காத்து சத்து நிறைந்த மண்ணை, நம் வருங்கால தலைமுறைக்குப் பரிசாக அளிப்போம்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்,
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
புற்றுநோய், சுகர் என பல நோய்க்குத் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு இலையே போதும்!