சூரியசக்தி மின்வேலி அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
-
வன விலங்குகளால் விவசாய நிலங்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுவதைத் தடுக்க சூரிய ஒடிளி மின்வேலி பெருமளவில் உதவுகிறது.
சூரிய ஒளி மின்தகடுகள் (Solar panels)
சூரியசக்தி மின்வேலியானது, சூரிய ஒளி மின்தகடுகள் (Solar panels) மூலம் கிடைக்கும் மின்சாரத்தால் இயங்கக் கூடியது.
பயிர்களுக்கு பாதுகாப்பு (Protections for Crops)
சூரியஒளி மின்வேலி அமைப்பதால், யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளால் விளைபொருட்கள் சேதமடையாமல் தடுக்க முடியும்.
மானியம் (Subsidy)
சூரியஒளி மின்வேலி அமைக்க தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.
50% வரை கிடைக்கும் (Up to 50% available)
மேலும் சூரியசக்தி மின்வேலி அமைப்பிற்கான செலவுத் தொகையில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
தொடர்பு கொள்ள (Contact)
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள ஈரோடு மாவட்ட விவசாயிகள் கோபி வேளாண் உதவி செயற்பொறியாளர் (9942303069), ஈரோடு உதவி செயற்பொறியாளர் (9443894843) ஆகியோருக்கும், ஈரோடு அலுவலக எண்ணிற்கும் (0424-2270067) தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தைப் பட்ட காய்கறிகளுக்கு என்ன விலை கிடைக்கும்-TNAUவின் முன்னறிவிப்பு!