விவசாயிகள் பயிர்களை வளர்ப்பதில் காட்டும் அக்கறையை, அதன் கழிவுகளைப் பராமரித்து, அகற்றுவதிலும் காட்டுவதும் மிக மிக முக்கியம். அவ்வாறு பயிர்கழிவு மேலாண்மை செய்ய விரும்பும் விவசாயியா? உங்களுக்கு இந்தத் தகவல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு (Environmental pollution)
பொதுவாக பயிர் அறுவடை செய்த பின்னர் தானியபயிர்களின் தாள், வைக்கோல், தட்டைகள் மற்றும் பருத்தி,மிளகாய்,துவரை மார்களை அப்படி யே நிலத்தில் போட்டு தீயிட்டு கொளுத்துகின்றனர் இதனால் சுற்றுப்புற சூழல் புகையால் மாசுபடுகிறது.
வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டில்லி போன்ற பகுதியில் ஆண்டு தோறும் 2கோடி டன் பயிர்கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இதனால் எற்படும் காற்று மாசு காரணமாக மூன்று கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சி (Training)
பயிர்கழிவுகளைப் பயனுள்ள முறையில் உரமாக்கிக்கொள்ள ஏதுவாக, மத்திய மாநில அரசுகள் சார்பில் விவசாயிகளுக்குப் பயிற்சி மற்றும் செயல் விளக்கம் அளிக்க பட்டு வருகின்றன.
ஊக்கத்தொகை (Incentive)
அதுமட்டுமல்ல, பயிர்கழிவுகளைப் பயனுள்ள முறையாக பயன்படுத்த ஊக்கத் தொகை வட மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்கிவருகின்றன.
மேலும், பயிர்கழிவுகளை கொண்டு மின்சார ம் தயாரிக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
பயிர்கழிவுகளை கொண்டு (With crop residues)
மதிப்புக்டக்கூடியக் கைவினைப் பொருட்கள் தயாரிக்க மகளிர் சுய உதவி குழுவிற்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
தழைச்சத்து (Nutrient)
-
ஒரு டன் வைக்கோலை, எரிப்பதை விட மண்ணில் புதைத்தால், 11 கிலோ தழை சத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது.
-
தற்போது கிரியா லேப்ஸ் என்ற நிறுவனம் வைக்கோலை கூழாக மாற்றி ஒருமுறையேனும் பயன்படுத்த கூடிய சாப்பாட்டுத் தட்டுகள், உணவு பேக்கிங் செய்யும் அட்டைப்பெடடிகள் என சந்தைப்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றுகிறது.
இடுபொருள் (Input)
இது போன்ற தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டு வருகின்றன. உணவு காளான் உற்பத்தியில் வைக்கோல் முக்கிய இடு பொருட்களாகப் பயன்படுகிறது. எனவே விவசாயிகள் பயிர்கழிவுகளை எரிக்காமல் பயனுள்ள வகையில் மாற்றிப் பயன்படுத்த முன் வரவேண்டும். இதனால் மனித சமுதாயம் பயன்படுவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்பது திண்ணம்.
தகவல்
அக்ரி. சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...