Horticulture

Wednesday, 10 February 2021 11:08 AM , by: Elavarse Sivakumar

துவரைக்கு அரசின் குறைந்த பட்ச ஆதார (Minimum Support Price) விலை 6,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கொள்முதல் (Purchase)

  • மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டு காரிப் பருவ காலத்தில் அறுவடை செய்யப்படும் துவரை விளைபொருட்கள் இந்தாண்டு, ஏப்ரல் 9ம் தேதி வரை கொள்முதல் செய்யப்படும்.

  • இந்த கொள்முதல், கரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

  • இந்தத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படவுள்ள துவரை நியாயமான சராசரி தரத்தின்படி இருக்க வேண்டும்.

  • விவசாயிகளால் கொண்டு வரப்படும் துவரை பயிரானது, இதர தானியங்களின் கலப்பு இல்லாமலும், சேதம் அடையாமலும், முதிர்வடையாத சுருங்கிய நிலையில் இல்லாமலும், வண்டுகள் தாக்காமலும் இருக்க வேண்டியது அவசியம்.

  • துவரையின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்கும் (Humidity) குறைவாகவும் இருக்க வேண்டும்.

  • இதுவரை விளைபொருளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை (MSP) குவிண்டாலுக்கு ரூ.6.000 எனக் கொள்முதல் செய்யப்படும்.

  • கொள்முதல் செய்யப்படும் துவரைக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

  • மேலும், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகளின் சிட்டா அடங்கலில் துவரை சாகுபடி பரப்பளவு இடம் பெற்றிருக்க வேண்டும்.

  • வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல் ஆகியவ இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  • எனவே, கரூர் மாவட்டம் அய்யர்மலை. இரும்பூதிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், மேற்பார்வையாளர் மற்றும் கிருஷ்ணராயபுரம் தாலுகா கீழபஞ்சம்பட்டி சீனிவாசன் தோட்டம் ஆகிய முகவரிகளில் சென்று விவசாயிகள் பயனடையலாம்.

  • இவ்வாய்ப்பினை துவரை பயிரிட்டுள்ள விவசாயிகள் பயன்படுத்தி தங்களது

  • விளைபொருட்களை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

சூரிய மின்வேலி அமைக்க 50% மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

வட்டி இல்லாதக் கடன்- இந்த ஆப்-பில் உடனே கிடைக்கும்!

வறண்டு போனாலும், தண்ணீர் நின்றாலும் நிரந்தர வருமானம் தரும் கோரை சாகுபடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)