Horticulture

Friday, 05 April 2019 03:07 PM

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் புது வகையான மல்லிகையை கண்டுபிடுத்துள்ளனர். இதற்கு நட்சத்திர மல்லி என பெயர் சூட்டியுள்ளனர்.

நட்சத்திர மல்லிகையின் சிறப்பு

இவ்வகை மல்லி சிகப்பு மண், கருப்பு மண் போன்றவைகளில் வளர கூடியது. எல்லா தட்பவெப்ப நிலையிலும் வளரக்கூடியது, எனவே இவ்வகை மல்லிகையானது ஆண்டு முழுவதும் சந்தைகளில் கிடைக்கும். ஜாதி மல்லிக்கு மாற்றாக இது கண்டுபிடிக்க பட்டுள்ளது. ஒரு செடியிலிருந்து ஆண்டொன்றுக்கு 2.21kg  மலர்களை பறிக்க முடியும். ஒரு ஹெக்டருக்கு 7.41டன் நட்சத்திர மல்லி கிடைக்கும்.

தர்மபுரி, சத்தியமங்கலம், ஈரோடு போன்ற பகுதிகளில் பயிரிடும் பணி தொடங்கி விட்டது. இன்னும் ௬ முதல் ௭ மாதத்திற்குள் சந்தைக்கு வர தயாராகி விடும். அழகிய பெரிய மொட்டுகளுடன், மிதமான நறுமணம் கொண்டவையாக இருக்கும். மொட்டுக்களை பரித்த பின்பும் 4 முதல் 5 மணி  நேரம் விரியாமல் இருக்கும். ( அறை வெப்ப நிலையில் 12 மணி நேரமும்,  குளிரூட்டப்பட்ட அறையில் 60 மணி நேரமும் இருக்கும்). நீண்ட மலர்காம்பு பறிப்பதற்கும், மலர்ச்சரம் தொடுப்பதற்கும் எதுவாக உள்ளது.

விரைவில் சந்தையில் எதிர் பார்க்கலாம் என்பது மல்லிகை பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி எனலாம்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)