Horticulture

Friday, 18 June 2021 07:00 AM , by: Elavarse Sivakumar

Credit : Synagenta

நெல் பயிரில் தண்டு துளைப்பான் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏதுவாக விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:

1800 ஹெக்டேர் (1800 ha)

நடப்பாண்டு கார் பருவத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நெல் பயிர் 1800 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு வளர்ச்சி பருவத்தில் உள்ளது. இப்பருவத்தில் பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டதும் கண்காணித்து உடனடியாக பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு (Integrated crop protection)

மாவட்டத்தின் சில பகுதிகளில் நெல் பயிரில் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் காணப்படுகிறது. தண்டு துளைப்பான் தாக்குதல் தங்கள் வயல்களிலும் உள்ளதா என்பதை உடனடியாக விவசாயிகள் கண்டறிவதுடன், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளுதல் மிக மிக அவசியமாகிறது.

குருத்து காய்தல்

பாதிக்கப்பட்ட பயிர்களின் இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக் கூட்டம் காணப்படும். தழைப் பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து வளரும் தண்டுகளை உட்கொள்வதால் அதன் நடுப்பகுதி காய்ந்து விடுகிறது. இதுவே குருத்து காய்தல் எனப்படுகிறது.

வெண்கதிர் 

நன்கு வளர்ச் சியடைந்த பயிரில் முழு தானியக் கதிர்களும் காய்ந்துவிடும். எஞ்சியிருக்கும் தட்டையான தானியங்களே வெண்கதிர் எனப்படுகிறது. குருத்தைப் பிடித்து இழுக்கும் போது அவை எளிதாக கையோடு வந்துவிடும். பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் காணப்படும்.

டிரைக்கோடெர்மா (Trichoderma)

நோயை முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா ஜப்பானிக் கம் ஹெக்டேருக்கு 5 மில்லி லிட்டர் வீதம் இரண்டு முறை நாற்றாங்காலில் தெளிக்க வேண்டும்.

நெருக்கமாக நடக்கூடாது (Do not walk close)

நாற்றுக்களை நெருக்கமாக நடுவதைத் தவிர்க்க வேண்டும். நாற்று நடும்போது நாற்றின் நுனியைக் கிள்ளி விடுவதால் தண்டு துளைப்பானின் முட்டை குவியல் அழிக்கப்படுகிறது.

வேப்பக் கொட்டைச்சாறு (Neem nut juice)

வேப்பக் கொட்டைச்சாறு தெளிப்பதன் மூலம் தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

சமச்சீர் உரப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி!

பயிர்களைப் பாதுகாக்க உயிர்வேலி அமைப்பு முறையை விவசாயிகள் கையாள வேண்டும்! இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பார்ப்பு!

நாட்டுக்கோழி வளர்ப்பில் முட்டையின் சத்துக்களுக்கு தேவையான தீவனங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)