ஈரோடு, மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில், நெல் அறுவடை தொடங்கி நடந்து வரும் நிலையில் வைக்கோல் (Straw) விற்பனைத் தீவிரமடைந்துள்ளது.
பிரதான பயிர் (The main crop)
ஈரோடு மாவட்டம், மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், நெல் பிரதான பயிராக உள்ளது.
உலர் தீவனம் (Dry fodder)
அறுவடைக்குப்பின் கிடைக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கு உலர் தீவனமாக பயன்படுகிறது. எனவே இதற்கு எப்போதுமே தேவை உள்ளது.அதன்படி நடப்பாண்டு அறுவடைக்கு விற்பனையாகிறது பின்பு வைக்கோல்கள் கட்டுக்கட்டாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இயந்திரங்கள் (Machines)
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது : தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால், பெரும்பாலான இடங்கள், இயந்திரங்கள் வாயிலாக தான் அறுவடை நடக்கிறது.
அதனால் வைக்கோல் கட்டு உருவாக்குவதற்கும் இயந்திரங்கள் படுத்தப்படுகின்றன.
வயலில் பரவிக்கிடக்கும் வைக்கோலை ஒன்று சோத்து உருளை வடிவ கட்டுகளாக மாற்றுகின்றனர்.
ரூ.5,000க்கு விற்பனை (Selling for Rs.5,000)
ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள வைக்கோல், ரூ5,000க்கு விற்பனையாகிறது. ஒருகட்டு உத்தேசமாக ரூ.225க்குகொடுக்கிறோம். ஒரு ஏக்கர் பரப்பில் சுமார் 20 முதல் 25 கட்டுகள் கிடைக்கின்றன. இவ்வாறு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!
இயற்கை பூச்சி விரட்டியான மோர்க்கரைசல் தயாரிப்பது எப்படி?
உணவுப் பூங்கா அமைக்க விருப்பமா?அழைக்கிறது மத்திய அரசு!