சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 16 April, 2021 9:35 AM IST
Strict action if fertilizers are sold at extra cost- Agriculture Warning!
Credit : GEP

உரங்களின் விலைஉயர்வைப் பயன்படுத்திக்கொண்டு, செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி அவற்றைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கையிருப்பு (Stock)

தமிழகத்தில் டி.ஏ.பி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலை உயர்ந்து இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் யூரியா 2254 மெட்ரிக் டன், டிஏபி 693 மெட்ரிக் டன், பொட்டாஷ் 775 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1215 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 136 மெட்ரிக் டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உரத்துறை அறிவுறுத்தல்

  • 2020-21ம் ஆண்டு அரசால் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையிலையே தற்போதும் டிஏபி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது.

  • இதனால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  • மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும்.

  • உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை பராமரிக்க வேண்டும்.

  • உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

உரம் வாங்கும் போது விவசாயிகள் உரிய ரசீது வழங்க வேண்டும். இருப்பு விபரங்கள் சரியாகப் பராமரிக்க வேண்டும். அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனையில் எடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தகவல்
உத்தண்டராமன்
விருதுநகர் வேளாண்மை இணை இயக்குநர்

மேலும் படிக்க...

மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் - விலை ரூ.7.21 லட்சம் மட்டுமே!

உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!

கோடை நெல் உழவில் மேற்கொள்ள வேண்டிய பூச்சி மேலாண்மை முறைகள்! - வேளாண் துறை ஆலோசனை!!

English Summary: Strict action if fertilizers are sold at extra cost- Agriculture Warning!
Published on: 16 April 2021, 09:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now