பொள்ளாச்சியில் உள்ள உடுமலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டுப் பயனடையுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வேளாண்மை உழவர் நலத்துறையின் வாயிலாக, உடுமலை வட்டத்திற்கு உட்பட்ட கல்லாபுரம், ஆண்டியகவுண்டனூர், ஜல்லிப்பட்டி ஊராட்சிகளுக்கு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் கருவிகளுக்கான மானியம் வழங்கப்படுகிறது.
மானியம் எவ்வளவு? (How much is the subsidy?)
குறிப்பாக விசைத்தெளிப்பான்கள் 5 எண்களும், கைத்தெளிப்பான்கள் -5 எண்களும் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்ய 15 விவசாயிகளுக்கும் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இந்த குருவிகள் அனைத்தும் அங்குள்ள, வேளாண்மை விரிவாக்க மையத்தில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.இதில் விசைத்தெளிப்பான் முழு விலை ரூ.8,820, மானியம் ரூ. 3,000 விவசாயியின் பங்களிப்பு தொகை ரூ.5,820ஆக இருக்கும்.
இதேபோல் கைத்தெளிப்பான் மொத்த விலை ரூ.2,649, மானியம் ரூ. 750, விவசாயின் பங்களிப்பு தொகை ரூ. 1900. உளுந்து 5 கிலோவிற்கான விலை ரூ.485 மானியம், ரூ.363 (75 சதவீதம் மானியம்) விவசாயியின் பங்களிப்பு தொகை ரூ.122.
தொடர்பு கொள்ள (contact)
கூடுதல் விபரங்களுக்கு, வேளாண்மை உதவி இயக்குனர், உடுமலை, 9944557552 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.எனவே விவசாயிகள் இவற்றை வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்க்ள.
மேலும் படிக்க...
முழு முட்டை Vs வெள்ளைக்கரு – எது ஆரோக்கியமானது?
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!