பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 14 August, 2021 10:54 AM IST
Credit : Express Tamil

கோவை மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சிறுதானியப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்க ரூ.35.8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நோயில்லா வாழ்க்கை (Disease-free life)

நம் முன்னோர்களின் நோயில்லா வாழ்க்கைக்கும், நீண்ட ஆயுளுக்கும், கட்டுக்கோப்பான உடலமைப்புக்கும் அவர்கள் சிறுதானியங்களைத் தொடர்ச்சியாகத் தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டதே முக்கியக் காரணம்.

ஆக நோயின்றி வாழ சிறுதானியங்கள் வித்திடுகின்றன என்பதே உண்மை.
அந்த வகையில், சிறுதானிய பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழக அரசு உழவர் நலத்துறை சார்பில், மானியம் வழங்கப்படுகிறது.

இது குறித்து, கோவை மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட இயக்குனர் சித்ராதேவி கூறுகையில்:

ரூ.35.8 லட்சம் (Rs 35.8 lakh)

கோவை மாவட்டத்தில், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சிறுதானிய பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க, ரூ.35.8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில், 350 ஏக்கரில் சோளம், 25 ஏக்கரில் கம்பு செயல் விளக்க திடல் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உரங்கள் (Fertilizers)

அதற்கு தேவையான உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை உரம், வறட்சியை தாக்கி வளரக்கூடிய பூசா ஹைரொஜெல் போன்ற இடுபொருட்கள், மானியத்துடன் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மூலம் வழங்கப்பட உள்ளது.

50% மானியம் (50% subsidy)

இதற்கு பின்னேற்பு மானியமாக, 50 சதவீதம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் வழங்கப்படும். மானியங்களின் விவரங்களை, வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி, விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மருத்துவப் பயன்கள் (Medicinal uses)

ஆறுமாதக் குழந்தை முதல் அறுபது வயது பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். சிறுதானியம் என்பது வரகு, சாமை தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் உள்ள சிறிய அளவிலான தானியங்கள் ஆகும்.

எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

கம்பு 

ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.

திணை 

இதயத்தைப் பலப்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.

சாமை 

ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

கேழ்வரகு

எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.

வரகு

உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்லது.

குதிரைவாலி

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.

மேலும் படிக்க...

மிகவும் சக்தி வாய்ந்த கொழுப்பை கரைக்கும் பழங்கள்

Benefits of lemon: எலுமிச்சையில் இருக்கும் வியக்க வைக்கும் நன்மைகள்!

English Summary: Subsidy for small grain farmers - a wonderful opportunity!
Published on: 13 August 2021, 09:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now