அரசின் மானிய உதவி மூலம் முந்திரி சாகுபடி செய்ய விரும்பும் சிவகங்கை மாவட்டத்தின் காளையார் கோவில் பகுதி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் மு.சத்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
ரூ.12,000
முந்திரி சாகுபடிக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ஹெக்டேருக்கு ரூ.12,000 மானிய உதவி வழங்கப்படுகிறது.
4 ஹெக்டேர் (4 hectares)
1 ஹெக்டேருக்கு 204 எண்கள் முந்திரி ஒட்டுக் கன்றுகள் மானியத்தில் வழதுங்கப்படுகின்றன. ஒரு விவசாயி அதிகபட்சமாக 4 ஹெக்டேர் வரையிலும் மானியம் பெற முடியும். இதுதவிர பிரதமரின் நுண்ஷர் பாசனத் திட்டத்தின் மூலம் சொட்டுநீர் பாசனமும் அமைத்து முந்திரி சாகுபடியை மேற்கொள்ள இயலும்.
100 % மானியம் (100% subsidy)
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமம் சொட்டு நீர் பாசனம் அமைக்க நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
ஊடுபயிர் (Intercropping)
எனவே வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய முந்திரியை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும். முந்திரி மகசூல் பெற நடவு செய்த நாளில் இருந்து 3 ஆண்டுகள் ஆகும். இந்த 3 ஆண்டுகளில் ஊடுபயிராகக் காய்கனி, பயறு வகைகள் பயிரிட்டுக் கூடுதல் லாபம் பெற முடியும்.
எனவே இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் காளையார்கோவில் பகுதி விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரடியாக அணுகி விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
- சிட்டா
- பட்டா
- ஆதார் அட்டை நகல்
- சிறு , குறு விவசாயி சான்று
- குடும்ப அட்டை நகல்
- மார்பளவு புகைப்படம்
இவற்றுடன் காளையார் கோவில் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மிகவும் சக்தி வாய்ந்த கொழுப்பை கரைக்கும் பழங்கள்
Benefits of lemon: எலுமிச்சையில் இருக்கும் வியக்க வைக்கும் நன்மைகள்!