Horticulture

Monday, 09 November 2020 07:42 AM , by: Elavarse Sivakumar

Credit: Vivasayam

அங்கக விவசாயம் எனப்படும் இயற்கை விவசாயத்தின் மிக முக்கிய சவாலே உரங்கள் மற்றும் இயற்கை மருந்துகள்தான். அவ்வாறு பல இயற்கை மருந்துகள் இருந்தாலும், பயிர்களுக்கு 90 சதவீதம் தழைச்சத்தை அளிக்க துரித வளர்ச்சிக்கு வித்திடும் அசைவ மருந்து எது தெரியுமா? அதுதான் மீன் அமிலம்.

தேவையான பொருட்கள்

மீன் கழிவு            5 கிலோ
நாட்டுச்சர்க்கரை   5 கிலோ

தயாரிப்பு முறை (Prepartion)

ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் 5 கிலோ மீன் கழிவுவைப் போட்டு அதனுடன் 5 கிலோ நாட்டுச் சர்க்கரையைச் சேர்க்க வேண்டும். இதனைக் காற்றுப் புகாதவாறு இறுக்கமாக மூடி நிழலில், 45 நாட்கள் வைக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தால், பழ வாசனை அடிக்கும். நாட்டுச்சர்க்கரையும், மீன்கழிவும் கலந்து பிசுபிசுப்பான திரவமாக மாறியிருக்கும்.

அளவு (Quantity)

இதை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற கணக்கில் கலந்து பயிர்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.

பருவம் (Season)

பயிர் பூ மற்றும் காய்ப்பு பருவத்தில் தெளிக்கலாம்.

மீன் அமிலத்தின் பயன்கள் (Benefits)

  • பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.

  • பயிர்களுக்கு 90 சதவீதம் தழைச்சத்து தரக்கூடியது.

  • பயிர்களுக்கு பூக்கும் திறனை அதிகரிக்க செய்யும் தரமான காய்கறிகளை விளைவிக்க வித்திடுகிறது.

  • பயிர்கள் ஒரே சீராக செழித்து வளரும்.

  • நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

  • செவ்வாழை, தர்பூசணி போன்றவற்றிற்கு காய்கறி பயிர்களுக்கும் நிறததை அதிகரிக்கப் பயன்படுகிறது.

மேலும் படிக்க...

PM-Kissan முறைகேடு - 130 கோடி பறிமுதல்!

2 ஆயிரத்திற்கு ரூ.2 ஆயிரம் - படைப்புழுத்தாக்குதலால் கவலையில் விவசாயிகள்!

யாரெல்லாம் காளானை சாப்பிடக்கூடாது?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)