மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 May, 2019 11:32 AM IST

நாட்டு சர்க்கரை,அச்சு வெல்லம், இவை கரும்பு சாறிலிருந்து தயாரிக்கப் படுகின்றது,மற்றும் பனை மரத்தின் பதநீரிலிருந்து கருப்பட்டி, பனை வெல்லம், தயாரிக்கப் படுகின்றது. இந்த நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம், கருப்பட்டி, பனை வெல்லம், அனைத்தையும்  இனிப்பு பொருட்கள் தயாரிப்பதற்கு அதிக அளவில் பயன் படுத்துவார்கள்.

கரும்புச்சாறை பாகாகக் காய்ச்சப் பட்ட பிறகு அதனை குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு பின்பு பாகை அச்சுகளில் ஊற்றி இயற்க்கை முறையில் எந்த வித கெடுதலும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை,அச்சு வெல்லம், அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதற்குத் தேவைப்படும் கரும்பை, சத்தியமங்கலம், அந்தியூர்,பவனி, கோபி, கவுந்தம்பாடி ஆகிய இடங்களில்  இருந்தும் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பெற்று கொள்கின்றார்கள்.

மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், ஆகியவை கேரளம், ஆந்திரா, கர்நாடகம், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன.

பொள்ளாச்சி விவசாயி:

விவசாயம் பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாமல் வாழவே முடியாமல் தூக்கிட்டுக் கொள்ளும் விவசாயிகளுக்கு  இடையில், பொள்ளாச்சி மூட்டாம்பாளையத்தை சேர்ந்த "ராமகிருஷ்ணன்" விவசாயி அவர்கள் கரும்பிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கையான முறையில் நாட்டு சர்க்கரை,அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், தேன் பாகு ஆகியவற்றை தயாரித்து வருகின்றார். பொது மக்களின் கண் முன்னே கரும்பு சார் பிழிந்து,பாகாகக் காய்ச்சி, நேரடியாக நாட்டு சர்க்கரை தயார் செய்து தருவதால் மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றார்கள்.

 மருத்துவ குணம்:

இந்த நாட்டு சர்க்கரையில் இனிப்பை விட ஆரோக்கியம் அதிகம் உள்ளது. மேலும் இது உடலில் உண்டாகும் கழிவுகளை வெளியேற்றும் செயலை செய்கிறது. நாட்டு சர்க்கரையை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, மற்றும் இந்த நாட்டு சர்க்கரைக்கு இதயம் சம்பத்தப்பட்ட நோயை தடுக்கும் தன்மை உள்ளது. மேலும் ஆய்வாளர்களின் கருத்தில் இந்த நாட்டு சர்க்கரை உணவில் கலந்திருக்கும் எந்த வித ரசாயனத்தையும் முறிக்கும் தன்மை கொண்டது,மற்றும் இதனை புற்று நோய் ஏற்படாமல் காக்க உட்கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர்.

 

English Summary: Tamilnadu pollachi farmer doing great job in sugarcane jaggery production
Published on: 03 May 2019, 05:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now