வீட்டு பெண்களுக்கு பெரும்பாலும் தங்கள் வாசலிலோ,பால்கனியிலோ,அல்லது மாடியிலோ நிறைய பூந்தொட்டிகள்,செடிகள்,வைத்து தங்கள் இடத்தை அலங்கரிக்கும் ஆசை பெரிதாக இருக்கும்.ஆனால் இன்றைய நடைமுறையில் பெண்களும் பணிக்குச்செல்வதால் விதவிதமான பூந்தொட்டிகள்,செடிகள் வைத்து அதனை பராமரிக்கும் நேரம் கிடைப்பதில்லை.விதவிதமான பூக்கள், செடிகள் வைக்க வில்லை என்றாலும் நேரத்திற்கு உதவும் மருத்துவ குணம் நிறைந்த குறிப்பிட்ட செடிகளை வைத்து வளர்க்கலாம்.
துளசி: மருத்துவ குணம் நிறைந்தது,மேலும் சிறிதளவு விதையைக்கொண்டு ஒரு சின்ன தொட்டியில் எளிமையான முறையில் வளர்க்கலாம். இரும்பல்,சளி,போன்ற பிரச்னையின் போது தொட்டியில் இருந்து நான்கு,ஐந்து துளசி இலைகளை பறித்து குழந்தைகள்,பெரியவர்கள்,அனைவரும் உண்ணலாம்.
கற்பூர வள்ளி: துளசியைப்போன்று மிகவும் சிறந்த முறையில் உதவும் செடி. குழந்தைகளுக்கு சளி,வயிற்றுக்கோளாறு,ஜீரணப்பிரச்சனை போன்ற நேரங்களில் மிக சிறந்த மருந்தாக உதவுகிறது. இதனை பஜ்ஜி மாவில் போட்டு பஜ்ஜியாகவும் பொறித்துக்கொடுத்தல் குழந்தைகளை மிக எளிய முறையில் சாப்பிட வைக்கலாம், இதனை பெரியவர்கள் சாப்பிட்டாலும் ஜீரண சக்தி சீராகும்.வயிற்றுக்கோளாறு சீராகும்.
கரிசலாங்கண்ணி: தலைமுடிக்கு மிகவும் பயனுள்ள செடியாகும். சிறிது விதைக்கொண்டு தொட்டியில் நட்டு வைத்து காலை தண்ணீர் உற்றிவந்தால் தலை முடி வளர்க்க வேண்டும் என்பவர்களுக்கு சிறந்த மருந்தாக அமையும். வாரத்திற்கு ஒரு முறை அரைத்து தடவினால் நீண்ட கருமையான தலை முடி வளரும்.
விதவிதமான பூக்கள் செடிகள் வைக்க வில்லை என்றாலும் இப்படி ஒன்று இரண்டு செடிகளை வளர்த்தாலேயே சிரமம் இல்லாமலும் மற்றும் உரிய நேரத்தில் மருந்தாகவும் பெறலாம்.