காய்கறிகள் சில சமையங்களில் உச்ச விலையைத் தொடுவது வழக்கம். அந்த வகையில், எலுமிச்சைப்பழம் 40ஆயிரம் ரூபாய்க்கு விலைபோனது என்றால் நம்ப முடிகிறதா?
மாட்டுப்பொங்கல் விழா
இது கற்பனையல்ல! நிஜமான விலைதான். ஒரு எலுமிச்சம்பழம் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே மேலதெரு கீழத்தெரு பகுதியில் மாட்டுப்பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
அந்த ஊரில் உள்ள கீழத்தெரு, மேலத்தெரு, சலுகைபுரம் பகுதி மக்கள், தங்களது காவல் தெய்வங்களான பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
மாட்டுப்பொங்கல் அன்று, பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு தவிர்த்து வெள்ளை சேலை அணிந்து கோயில் வாசலில் பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு நேர்த்திக்கடனாக தொட்டில் கரும்பு கட்டினர்.
ஏலம் (Auction)
விழா முடிந்ததும் நேர்த்திக்கடனாக செலுத்தபட்ட கரும்புகள், விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை ஆகியவை ஏலம் விடப்பட்டன.இந்த ஏலத்தில் (Bid Auction for Prasadam) உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆண்குழந்தை ஐதீகம் (The myth of the male child)
இதில் கரும்பு, ஏலம் எடுத்தால், நினைத்த காரியம் கைகூடும் என்பதும், எலுமிச்சையை எடுத்தல் ஆண்குழந்தை பிறக்கும் என்பதும் அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால் அவற்றை போட்டிப் போட்டுக் கொண்டு பலரும் ஏலம் எடுத்தனர். இதில் மேல தெருவில் நடந்த ஏலத்தில் ஒரு கரும்பு ரூ.17,301க்கு ஏலம் போனது.
இதேபோன்று, கீழத்தெருவில் நடந்த ஏலத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை ஜெயக்குமார் என்பவர் ரூ.40,001.க்கு வாங்கினார்.
நம்பிக்கை (Hope)
இந்த விநோத ஏலம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- எங்கள் தெய்வங்களுக்கு முன்பு ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்பதற்காக அணிகலன்கள் அணியாமல் ஒரே மாதிரியாக உடையணிந்து பொங்கல் வைப்போம். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே விரதத்தைத் தொடங்கி விடுவோம். ஏலம் எடுப்போருக்கு நினைத்த காரியம் நடப்பதால் ஆண்டுதோறும் ஏலத்தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இவ்வாறு அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
Be Alert: இந்த ஆரோக்கிய உணவுகளும் ஆபத்தாய் முடிய வாய்ப்பிருக்கு!
10, 12 வகுப்புகளுக்குக் கட்டாயம் பொதுத்தேர்வு- அமைச்சர் அறிவிப்பு!