பெரும்பாலும் பாத்திக் கட்டி பாசனம் செய்யும் முறையில் தான் நடைமுறையில் சாகுபடி செய்து வருகிறோம். இதனால் வாய்க்கால்களிலும் பாத்திகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கும். ஓடும் போது கணிசமான அளவு 40 முதல் 75 % நீர் மட்டுமே பூமியின் அடியில் உறிஞ்சப்படுகிறது.
பிரச்சனைகள் (Problems)
இந்த சேதம் தண்ணீரின் அளவு, தண்ணீர் ஓடும் நேரம், நிலப்பரப்பின் சரிவு, மண்ணின் தன்மையைப் பொறுத்து வேறுபடும். மேலும், நிலப்பரப்பின் பாசன நீரில் உப்பு சேர்ந்து விடுதல், நீர் தேங்குதல் போன்ற பிரச்சனைகளும் தோன்றுகின்றன. இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண விரும்பினால், நவீன பாசன முறையான தெளிப்பு நீர்ப் பாசனமே சிறந்தது.
இம்முறையினால் மண்ணில் கசிந்து வீணாகும் நீரின் அளவுக் கணிசமாகக் குறையும். பாயும் தண்ணீரின் வேகத்தின் அளவை முழு அளவில் கட்டுப்படுத்த முடியும். இதனால், வடிகால்கள் வாய்க்கால்கள் ஆகியன அமைக்கவோ பராமரிக்கவோ தேவையில்லை.
முக்கியமான பாகங்கள் (Important parts)
-
அழுத்தம் கொடுக்கும் குழாய் பொறி
-
தூர் பகுதி-பம்பிற்கு குறைந்தது 30 சென்டி மீட்டர் அழுத்தம் கொடுக்கும் திறன் தேவை.
-
முக்கிய குழாய்களும் இணை குழாய்களும் இரும்பினால் உருவாக்கப்பட்டு, நிலத்தின் அடியில் பாதிக்கப் படுகின்றன.
-
இதனால் விவசாயத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை.
-
பக்கவாட்டுக் குழாய்கள் லேசான எடையுள்ள அலுமினியம் அல்லது பிவிசி (PVC)குழாய்களால் ஆனதாக இருக்க வேண்டும்.
-
தூவும் கருவிகள் ஒவ்வொரு கிளை குழாய்களும் இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும்.
-
இந்த ஒரு அமைப்பின் மூலம் 25 மீட்டர் ஆழமுள்ள வட்டமான இடத்திற்குத் தண்ணீர் தெளிக்கலாம்.
நன்மைகள் (Benefits)
-
மண்ணரிப்பு இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது.
-
நிலத்தை மட்டமாக்கத் தேவையில்லை . இதற்கான செலவும் மிச்சமாகிறது.
-
மேலும் மண்ணின் ஈரத் தன்மையை எளிதாக நிர்வகிக்கலாம்.
-
குறைந்த அளவு பாசனம், அடிக்கடி செய்ய முடிகிறது.
-
சிறு கால்வாய்கள், கரைகள் அமைக்கத் தேவையில்லை.
-
மண் ஆழமில்லாத நிலங்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிது தெளிப்பு நீர்ப் பாசனம்.
கூடுதல் விபரங்களுக்கு,
வெ.சூரியபிரகாஷ், சி.சக்திவேல்.
மின்னஞ்சல்: durai sakthivel999@gmail.com,
இளங்கலை வேளாண்மை மாணவர்கள்
மற்றும் முனைவர். பா.குணா உதவி பேராசிரியர்,
வேளாண் விரிவாக்க துறை,
வேளாண் புலம்,
பிரிஸ்ட் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்,
மின்னஞ்சல் : balu gunas8789@gmail.com ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியம்!