பயிருக்கு பாவியாகவும், விவசாயிகளுக்கு எதிரிகளாகவும் உள்ளவை பலவித நோய்கள். இயற்கை விவசாயத்தைப் பொருத்தவரை இந்த நோய்களைக் கட்டுப்படுத்துவதில், நுண்ணுயிர் உரமான டிரைக்கோடெர்மா விரிடியின் பங்கு இன்றியமையாதது.
அழியும் பாக்டீரியாக்கள் (Destroying bacteria)
பொதுவாக நமது மண்ணில் இயற்கை எரு பற்றாக்குறையின் காரணமாகவும், இயற்கை சூழல் காரணமாகவும் மண்ணையும் மனித இனத்தையும் காத்துக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிட்டன.
இதன் காரணமாகவே விவசாயத்தில் அதிக மகசூல் எடுக்க முடியவில்லை. குறைவான மகசூல் கிடைக்கிறது. அதனால் மீண்டும் விவசாயத்தைக் காப்பாற்ற விவசாயிகள் நுண்ணுயிர் உரங்கள் இட வேண்டும்
பயன்கள் (uses)
டிரைக்கோடெர்மா விரிடி எதிர் உயிர் பூஞ்சாணம் எனப்படும். இது வேர்களில் வளர்ந்து மற்ற பூஞ்சாணங்களை வளராமல் தடுத்துவிடும்.
எல்லாப் பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்தும். இதுதவிரப் பயிர்களுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்க மாற்றுவதில் டிரைக்கோடெர்மா விரிடி முக்கியப் பங்கு வகிக்கிறது. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதால், வேரின் செயல்திறன் அதிகரிக்கிறது.
டிரைக்கோடெர்மா விரிடியை அடியுரமாகவும் போடலாம். விதைநேர்த்தி செய்யயும் பயன்படுத்தலாம். அதேநேரத்தில் , தண்ணீரில் கலந்தும் ஊற்றலாம்.
பயன்படுத்துவது எப்படி? (How to use?)
-
2- 3 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 20 கிலோ மக்கிய தொழு எரு அல்லது மண்புழு எருவில் கலந்து நிழலில் ஒரு வாரம் வைத்திருந்து பிறகு பயிருக்கு போடலாம்.
-
தண்ணீர் தெளித்து ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் இவ்வாறு போடுவதால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
-
விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை நீர் தெளித்து கலந்து ½ மணிநேரம் நிழலில் உலர்த்தலாம்.
-
அல்லது ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை ஆறிய அரிசி வடிகஞ்சி 200 மில்லியில் கலந்து ½ மணிநேரம் நிழலில் உலர்த்தி பிறகு நடவு செய்யலாம்.
-
ஒருகிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றி விடலாம்.
-
நாற்று நேர்த்திக்கு ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றை நனைத்து நடவு செய்யலாம்.
தயாரிக்கும் முறை (Method of preparation)
-
சிறிய பாட்டில்களைக் கழுவிச் சுத்தமாக காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
-
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் நாட்டு சர்க்கரை என்ற விகிதத்தில் கலந்து ஒரு பாட்டிலுக்கு 200 மில்லி வீதம் ஊற்றவேண்டும்.
-
பிறகு இவற்றில் கிருமிகள் இருந்தால் அவற்றை வெளியேற்ற 2 மணிநேரம் சூடேற்றவும்.
-
அவை ஆறியபிறகு எடுத்து வெளிப்புறம் உள்ள கிருமிகளை வெளியேற்ற யூவி (UV) லைட்டில் வைக்கவும்.
-
டிரைக்கோடெர்மா விரிடியின் தாய்வித்தை சிறிதளவு எடுத்து பாட்டிலில் போட்டு அவற்றைப் படுக்கை வசமாக வைக்க வேண்டும்.
-
படுக்கை வசமாக வைப்பதால் பாட்டில் முழுவதும் டிரைக்கோடெர்மா விரிடி வளர்ந்துவிடும் இவ்வாறு படுக்கை வசமாக வைக்காவிடில் சர்க்கரைப்பாகு இருக்கும் அளவுக்குத்தான் டிரைக்கோடெர்மா விரிடி வளரும்.
-
டிரைக்கோடெர்மா விரிடி நன்கு வளர 7 நாட்கள் ஆகும்.பிறகு அவற்றை எடுத்து மிக்சியில் ஊற்றி சிறிது நேரம் அரைக்க வேண்டும்.
-
ஒரு பாட்டிலுக்கு 200மில்லி டிரைக்கோடெர்மா விரிடியில் 400 கிராம் டால்கம் பவுடரை கலந்து நிழலில் உலர்த்தவேண்டும்.
-
உலர்ந்தவற்றை எடுத்து சலித்து 1 கிலோ வீதம் எடுத்துச் சலித்து பாக்கெட் போடவேண்டும்.
மேலும் படிக்க...
விதைகளைப் பராமரிக்க வேண்டிய சரியான ஈரப்பதம் எவ்வளவு?
Freezer Boxல் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்த அதிசயம்!