மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளவுக்கு அதிகமான விளைச்சல் காரணமாக, அவை தோட்டத்திலேயே அழுகி வீணாகும் நிலை உருவாகியுள்ளது.
உடல்நலத்திற்கு ஏற்றது (Suitable for health)
அன்றாட உணவில் முக்கிய இடம்பிடிக்கும் காய்கறிகளில் ஒன்றாக கத்தரிக்காய் விளங்குகிறது. கத்தரிக்காயில் மலச்சிக்கலை போக்குவது, இதயத்தை பலப்படுத்துவது, ரத்த அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.
கத்தரிக்காய் சாகுபடி (Cultivation of eggplant)
கத்தரிக்காய் பயிரிட தை மற்றும் ஆடி பட்டங்கள் உகந்ததாக கருதப்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வேட்டங்குடி, செம்பதனிருப்பு, அல்லவிளாகம், ராதாநல்லூர், இளையமதுகூடம், புதுத்துறை, பட்டவளாகம் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் அதிக அளவில் கத்தரிக்காய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
அறுவடைக்குத் தயார் (Ready to harvest)
இந்த ஆண்டு தை மாத பட்டத்தில் பயிரிடப்பட்ட கத்தரிக்காய்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.
விலைபோகவில்லை (Not expensive)
ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கத்தரிக்காய் விற்பனை முற்றிலும் பதிக்கப்பட்டு விட்டது. ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற கத்தரிக்காயை ஒரு கிலோவை ரூ.5-க்கு கூட வாங்க ஆள் இல்லை என்ற நிலை உள்ளது.
அறுவடை இல்லை (No harvest)
இதன் காரணமாக பல விவசாயிகள் கத்தரிக்காய் அறுவடையை நிறுத்தி விட்டனர். இதன் காரணமாக தோட்டத்திலேயே கத்தரிக்காய்கள் அழுகி வீணாகும் அவலம் ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணீர் மல்க கூறுகையில்,
கொரோனா ஊரடங்கால் பாதிப்பு (Corona curvature damage)
நல்ல விலை கிடைக்கும் என்று கத்தரிக்காயை அதிகமாக சாகுபடி செய்தோம். ஆனால் கொரோனா ஊரடங்கால் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் கத்தரிக்காயை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டுவிட்டோம்.
அழுகும் கத்திரிக்காய் (Rotten eggplant)
இதனால் காய்கள் செடியிலேயே அழுகி கிடக்கிறது. எனவே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து தோட்டக்கலைத்துறை மூலம் கத்தரிக்காயைக் கொள்முதல் செய்து, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
நிலையான வருமானம் தரும் மண்புழு உரம்! தயாரிப்பது எப்படி?
விரைவில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!