சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்தால் தான், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ முடியும் என்று இயற்கை மருத்துவம் சொல்கிறது. சத்தான காய்கறி (Vegetables) வாங்கி சாப்பிட ஆசையா மார்க்கெட்டில் வாங்கினால், இது இரசாயன உரமிட்டு (Fertilizer), பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து வளர்த்திருப்பாங்களோ, உடலுக்கு ஆகாதோனு சந்தேகம் வருகிறது.
நமக்கு நாமே காய்கறி உற்பத்தி:
உணவு உற்பத்தியில் பசுமைப்புரட்சிக்கு (Green Revolution) பிறகு, ரசாயன பயன்பாடு அதிகமாக இருக்கும். இந்த பிரச்னையில் இருந்து விடுபட்டு, சோற்றில் கை வைக்கும் போது நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், நமக்கு நாமே காய்கறி உற்பத்தி (Vegetable Production) செய்ய வேண்டும். இதுவும், இப்பொழுது சாத்தியமாகி விட்டது.
மாடித் தோட்டத்திற்கு மானியம்:
தோட்டக்கலைத்துறையில் (Horticulture) வீட்டு காய்கறி தோட்டம், மாடி காய்கறி தோட்டம் துவங்க மானியத்துல (Subsidy) விதை கொடுக்கிறார்கள். வெயில் படுகின்ற மாதிரி கொஞ்ச இடமிருந்தாலும், நீங்களும் விவசாயி (Farmer) தான். காய்கறி விளைவித்து, சுவையாக சமைத்து, உண்ணலாம். தற்போது பருவ மழை காலம் என்பதால், காய்கறிகள் பயிரிட ஏற்ற தருணம். வீடுகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் மாடியில் தோட்டங்கள் அமைத்து காய்கறிகள் பயிரிட்டால் நன்றாக வளரும். தோட்டக்கலைத்துறை சார்பில், காய்கறி உற்பத்தி பெருக்கம் திட்டம் (Vegetable Production Multiplication Project) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், காய்கறி விதைகள் (Vegetable Seeds) மானியத்தில் வழங்கப்படுகிறது. தக்காளி, அவரை, வெண்டை, பீன்ஸ், முருங்கை விதை பாக்கெட்டுகள் அடங்கிய 'கிட்' ஒன்றின் விலை 25 ரூபாய். மானிய விலை, 10 ரூபாய் போக, 15 ரூபாய் செலுத்தி மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.இந்த விதை 'கிட்' பெற, ஆதார் நகல் (Aadhar Card) கொண்டு வர வேண்டும். தேவைப்படுவோர், அந்தந்த பகுதியில இருக்கின்ற தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி தெரிவித்திருக்கிறார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இயற்கை வழி விவசாயம் செய்தால், தோட்டக்கலைத் துறை சார்பில் மானியம்!
ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!