சிவகங்கை மாவட்டத்தில், காளான் வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளதால், விருப்பமுள்ளவர்கள் பங்கேற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உணவுத் தொழில் (Food industry)
மனிதர்கள் உயிருள்ளவரை எந்த உணவுத்தொழிலுக்கும் வாழ்வு உண்டு. எனவே உணவை அடிப்படையாகக் கொண்டத் தொழிலைக் கையில் எடுத்துக்கொள்வது நமக்கு மட்டும் நன்மையைக் கொடுக்காமல் மனிதகுலத்திற்கு நன்மைப் பயக்கும். அவ்வாறு மனித குலத்திற்கு உதவும் தொழில் செய்ய விரும்புபவர்களா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குத்தான்.
பயிற்சி முகாம் (Training camp)
சிவகங்கை மாவட்டத்தில் காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்தப் பயிற்சி இன்று (21.10.202) நடைபெறுகிறது. இதேபோல், தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப் படுத்துதல் குறித்தப் பயிற்சி 26.10.2021 அன்று நடைபெறும்.
பயிற்சி நேரம் (Training time)
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இடம் (Location)
பஞ்சாப் நேசனல் வங்கி, உழவர் பயிற்சி மையம்,
பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம்.
முன்பதிவுக்கு (For booking)
94885 75716 என்ற செல்ஃபோன் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
சிறப்பம்சங்கள் (Highlights)
- காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்பு
- காளான் வளர்ப்பின் முக்கியத்துவம்
- விதை உற்பத்தி
- வளர்ப்பு முறைகள்
- விற்பனை உத்திகள்
- மதிப்பூட்டப்பட்ட உணவுகள் தயாரித்தல்
இத்தனை விஷயங்கள் குறித்தும் செயல்முறை விளக்கத்தோடு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தேனீ வளர்ப்பு பயிற்சி (Beekeeping training)
-
தேனீ வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம்
-
குளிர்காலம், மழைக்காலம் மற்றும் கோடைக்காலங்களில் தேன் கூடு தேனீப் பெட்டிகளை பராமரித்தல்
-
தேனீக்களை நோய்த் தாக்குதலில் இருந்து காக்கும் வழிமுறைகள்
-
தேனீப் பெட்டிகளில் சேகரம் ஆன தேனை லாவகமாக எப்படி எடுப்பது?
-
தேனைப் பதப்படுத்தும் வழிமுறைகள் எவை?
-
சந்தைப்படுத்தும் வழிமுறைகள்
-
இதர வணிக அணுகுமுறைகள்
மேலே கூறிய அத்தனை விஷயங்கள் குறித்தும், தேனீ வளர்ப்பு பயிற்சி வகுப்பில் செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க...
விதை உற்பத்தியில் பிற ரக கலப்பினை தவிர்ப்பது எப்படி?
விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல்- அரசு அதிரடி முடிவு!