மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 April, 2021 7:13 PM IST
Credit : Master class

நார்ப்பயிர்களின் அரசனாகவும், வெள்ளைத் தங்கமாகவும் போற்றப்படுவது பருத்தி பயிர் (Cotton crop). இதை பணப்பயிர் என்றும் கூறுவோம். இதில் ஆசிய, ஆப்பிரிக்க பருத்தி வகையைச் சேர்ந்தது காசிப்பியம் ஆர்போரியம், காசிப்பியம் ஹெர்பேசியம். அமெரிக்க பருத்தி வகையைச் சேர்ந்தது காசிப்பியம் ஹிர்சூட்டம், காசிப்பியம் பார்படன்ஸ். இவையெல்லாம் பயிரிட ஏற்ற ரகங்கள்.

பருத்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ள போதிலும் உலக நாடுகளை ஒப்பிடுகையில் உற்பத்தி திறன் மிகவும் குறைவு தான். நம் நாட்டில் பருத்தி 70 சதவீதத்துக்கு மேல் மானாவாரியில் பயிரிடப்படுகிறது. விட்டு விட்டு பெய்யும் மழை மற்றும் பூச்சி (Pest), நோய் தாக்குதல்களினால் உற்பத்தித் திறன் குறைகிறது.

தமிழகத்தின் நிலை (Status of Tamil Nadu)

தமிழகத்தில் தேவையை விட உற்பத்தி குறைவாகவே உள்ளது. உற்பத்தி மற்றும் தேவைக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க வேண்டும். அதற்கு பயிரிடும் பரப்பளவு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க சரியான தொழில் நுட்பங்களை (Techniques) கடைப்பிடிப்பது விவசாயிகளின் அவசிய தேவை.

நல்ல ரகங்கள் (Good varieties)

நல்ல ரகங்களே உயர் விளைச்சலுக்கு அடிப்படை. கோவை வேளாண்மைப் பல்கலை மற்றும் கோவை மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் உயர் விளைச்சல் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கியுள்ளனர்.

வேளாண்மைப் பல்கலை பருத்தி துறையில் வெளியிட்டுள்ள எம்.சி.யு 5, எம்.சி.யு.7, கோ 14 மற்றும் கோ 17 ஆகியவை சிறந்த ரகங்கள். எம்.சி.யு.5 மற்றும் கோ14 இரண்டும் மிக நீண்ட இழை பருத்தி வகையை சேர்ந்தது.

கோ 17 ரகம்(Co 17 typ) 

இது 125 - 135 நாட்களில் முதிர்ச்சியடையும். குறுகிய காலத்தில் காய் பிடிக்கும். செடியில் கிளை இருக்காது. சராசரியாக எக்டேருக்கு 2361 கிலோ என்ற அளவில் விதை பருத்தி மகசூல் கிடைக்கும். இந்த ரகம் நெல் தரிசாக தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் பயிரிட ஏற்றது.


பெரம்பலூர், திண்டிவனம், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடியில் குளிர்கால மானாவாரிக்கு ஏற்றது. மதுரை, தேனி மற்றும் விருதுநகரில் கோடைகால பாசனத்திற்கும் பயிரிட ஏற்றது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட எஸ்விபிஆர் 2, எஸ்விபிஆர் 4, எஸ்விபிஆர் 5 மற்றும் எஸ்விபிஆர் 6 ரகங்கள் அதிக மகசூல் (High Yield) தரக்கூடியது.

மானாவாரிக்கு உகந்தது (மானாவாரிக்கு உகந்தது)

கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள கேசி 2 மற்றும் கேசி 3 ரகங்கள் மானாவாரிக்கு உகந்தது. சுத்தமான பருத்திச் சுளைகளை துணிப்பை அல்லது சாக்குப் பையிலோ வைத்துக் கொண்டு தரம் குறைந்த அல்லது கொட்டை பருத்தியை தனியாக இன்னொரு பையிலும் சேகரிக்க வேண்டும். துணிப்பையில் சேமிப்பதால் பருத்தி மாசுபடாமல் சுத்தமாக இருக்கிறது.

எடுத்த பருத்தியை வயலில் மண் தரை மேல் கொட்டி வைப்பதோ, நாள் முழுவதும் வெப்பத்தில் காயும்படி விடுவதோ கூடாது. விற்பனைக்கு முன் நல்ல பருத்தி, கொட்டைப் பருத்தியை மறுபடியும் தரம் பிரித்து சாக்குப் பைகளில் தைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டும்.

ராஜேஸ்வரி 

துறைத்தலைவர் 

மகாலிங்கம்,

பேராசிரியர்

பருத்தி துறை,
பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம்,
கோவை வேளாண் பல்கலைக்கழகம்
cotton@tnau.ac.in

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

விவசாயிகள் தங்கள் விவசாயத்தோடு தேனீ வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் - மோடி உரை!!

பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!

கணக்கில்லா நன்மை தரும் கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி!

English Summary: What are the varieties of cotton suitable for summer and rainy season?
Published on: 31 March 2021, 02:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now