Horticulture

Wednesday, 17 February 2021 11:02 AM , by: Elavarse Sivakumar

Credit : Garden plants

வாழைக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதே சிறந்தது எனவும், இதன் மூலம் கூடுதல் மகசூலைப் பெற முடியும் என்றும் வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை துறை முதல்வர் புகழேந்தி கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் கூறுகையில் :
வாழை சாகுபடியில், கன்று நடவு செய்த உடன் உயிர்த் தண்ணீர், பின்பு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

சொட்டு நீர் பாசனம் (Drip irrigation)

சொட்டு நீர்ப்பாசன முறையில் வாழைக்குலை விரைவில் உருவாவதுடன், 40 முதல் 45 சதவீதம் வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது.சொட்டு நீர் அமைப்பில் தினமும், 2 முதல் 3 மணி நேரம் பாசனம் செய்வதேப் போதுமானதாகும்.

குலை தாமதம் (Shuffle delay)

சரியாக நீர்பாய்ச்சாமல் இருந்தால் குலை உருவாவது தாமதமாகும்.காய்கள் முதிர்ச்சியடைவதும், தரமும் பாதிக்கப்படும்.

சொட்டுநீர் பாசனத்தின் பலன் (Benefit of drip irrigation) 

இது, சொட்டுநீர் பாசனத்தில் தவிர்க்கப்படுகிறது. 50 சதவீதம் வரை மின் சக்தி மற்றும் வேலையாட்களுக்கு ஆகும் செலவும் குறைகிறது.ஹெக்டேருக்கு, 1,200 முதல் 1,500 கிலோ வாட் மின்சக்தி சேமிக்கப்படுகிறது.

மகசூல் அதிகரிப்பு (Yield increase)

பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல், 30 முதல் 50 சதவீதம் அதிகமாகிறது.

எனவே விவசாயிகள் தோட்டக்கலை துறையில் மானியம் பெற்று, வாழைக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு  அவர் கூறினார்.

மேலும் படிக்க...

சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள்- விவசாயிகளுக்கு அழைப்பு!

பயிரின் வளர்ச்சி ஊக்கிகள் ஏழு வகை!

மாடுகளில் உண்ணிகளைக் கட்டுப்படுத்தும் பல்மூலிகை மருந்து!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)