Horticulture

Tuesday, 05 October 2021 10:43 AM , by: Elavarse Sivakumar

இராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விதைப்பண்ணை அமைக்கத் தேவையான விதைகளைப் பெற்றுப் பயனடையுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதைகள் விற்பனைக்கு (Seeds for sale)

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களிலும்,
வல்லுநர் விதை மற்றும் ஆதார நிலை நெல் விதைகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன.

விதைப்பண்ணைக்கான வழிமுறைகள் (
Instructions for seeding)

  • எனவே கோ 51, ஆடுதுறை 45 மற்றும் ஜோதி போன்ற குறுகிய கால விதை இரகங்கள் மற்றும் டிகேஎம் 13, என்எல்ஆர் 34449, ஆர்என்ஆர் 15048 மற்றும் பிபிடி 5204 போன்ற மத்திய கால விதை இரகங்களைத் தேர்வு செய்யலாம்.

  • விதைகளை வாங்கும் போது காலாவதித் தேதி பார்த்து வாங்க வேண்டியது மிக மிக அவசியம்.

  • விற்பனை ரசீது மற்றும் சான்று அட்டைகள் ஆகியவற்றை விதைப்பற்றிய அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக விதைப் பண்ணைகளை பதிவு செய்ய வேண்டும்.

  • விதைப்பண்ணை அமைக்க விதைச்சான்றுக் கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு விதைப்பு கட்டணமாகமாக ரூ.30/-ம் செலுத்த வேண்டும்.

  • விதைத்த 35ம் நாள் அல்லது பயிர் பூப்பதற்கு 15 நாட்கள் முன்பு இதில் எது முன்னதோ அதற்குள் பதிவு செய்ய வேண்டும்.

  • விதைப்பண்ணையில் இரு வேறு பகுதிகள் 50 மீட்டர்களுக்கு அதிக இடைவெளியில் இருந்தாலோ, விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.

  • பதிவு செய்த விதைப்பண்ணைகள் பூக்கும் தருணத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் விதைச்சான்று அலுவலரால் வயலில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

  • ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத்தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே, உற்பத்தி செய்யப்பட்ட வயல்மட்ட விதைகளுக்கு விதை சுத்தி அறிக்கை வழங்கப்படுகிறது.

  • விதைப்பண்ணையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வயல்மட்ட விதைகள் அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

  • விதை சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திப்பணி மேற்கொள்ளப்பட்டு கழிவுகள் நீக்கப்பட்டு சுத்தமான ஒரே மாதிரியான சுத்தி விதைகள் பிரிக்கப்படுகிறது.

  • சுத்திகரிக்கப்பட்ட விதைக்குவியல்களில் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.

  • பகுப்பாய்வில் தேறிய விதைக்குவியலுக்கு சான்று அட்டைகள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

  • விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம்.

பிறபயிர் பண்ணைகள் (Other crop farms)

இதுத் தவிர சிறுதானியங்களான குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம், பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்களில் நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க இருக்கும் விவசாயிகளும் விண்ணப் பிக்கலாம்.இத்தகவலை, இராமநாதபுரம், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர், சீ.சக்திகணேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

தரிசு நிலத்தை விளைநிலமாக்கி சாகுபடி செய்ய நீங்க ரெடியா? உங்களுக்கு மானியம் கிடைக்கும்!

பூச்சிமருந்து மற்றும் பூஞ்சான மருந்துகள் பாதுகாப்பு மசோதா - ஒரு பார்வை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)