மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 January, 2021 8:58 AM IST
Credit : Kissan Zinc

நெல் பயிருக்கு ஜிங்க் சல்பேட் (Zinc sulfate ) யை இடுவதன் மூலம் துத்தநாக சத்துப் பற்றாக்குறையைப் போக்கலாம் என கிருஷ்ணகிரி வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் சி.முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

  • கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நவரைப் பருவத்தில் நெற்பயிர் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • நெல் பயிருக்கு அடிப்படையாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள், தழை சாம்பல், இரும்பு, துத்ததாகம், தாமிரம், மாங்கனீசு ஆகியவை ஆகும்.

  • ஆனால் தற்போது கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நெல் பயிரில் துத்தநாகச் சத்து குறைபாடு காணப்படுகிறது.

  • ஒரே நிலத்தில் தொடர்ந்து நெல்பயிர் சாகுபடி செய்வதால், நிலத்தில் எப்போதும் நீர் தேங்கி, கரையா உப்புகள் அதிகளவு அதிகரித்து துத்தநாகச் சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

 

  • மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகம் இருந்தால், துத்தநாகச் சத்து பயிருக்கு கிடைக்க இயலாத நிலை ஏற்படும்.

  • பயிருக்கு தேவையான அளவுக்கு அதிகமாக மணிச்சத்து மக்னீசம் சத்து மற்றும் இரும்புச் சத்து இடுவதால் அவை துத்தநாகச் சத்தின் செயல் திறனைக் குறைக்கிறது.

  • எனவே துத்தநாக சத்து பற்றாக்குறை இருந்தால், பயிர் வளர்ச்சி குன்றி, இளம் இலைகள் மஞ்சள் நிற கோடுகள் கொண்டதாக மாறிவிடும்.

  • பின்னர், காய்ந்து விடும். நடு நரம்பினை ஒட்டிய பகுதிகள் வெண்மை நிறக் கோடுகள் உருவான இலைகள் வெளுத்து காணப்படும்.

  • இலைத்தாளின் அகலம் குறைந்து சிறுத்து காணப்படும்.

  • நெற்கதிர் தூர்கள் பிடிக்கும் பருவத்தில் தூர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதோடு, மலட்டுத் தன்மையுடன் காணப்படும். இதனால், விளைச்சல் குறைவு ஏற்படும்.

  • துத்தநாகச் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் பயிர் நடவுக்கு முன்பு ஒரு முறையும், நடவுக்கு பின் 30 முதல் 40 நாள்களுக்கு ஒரு முறையும் இட்டு, பயிரின் துத்தநாகச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து பயிரின் மகசூல் இழப்பை தவிர்க்கலாம்.

இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

டிராக்டருடன் கூடிய அறுவடை இயந்திரம்- விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் கிடைக்கும்!

சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளைத் தேடி வந்து உதவும் வேளாண் துறையின் புதியத் திட்டம்!

அன்னாசி பழத்தை தினமும் சாப்பிடலாமா?

English Summary: Zinc sulphate to cure zinc deficiency - Farmers' attention!
Published on: 02 January 2021, 08:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now