இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 September, 2018 7:27 AM IST

சுரைக்காய் தமிழர்களின் உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர்சத்து அதிகம் உள்ள சுரைக்காய் பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. மருத்துவ குணங்கள் கொண்ட காய்களில் சுரைக்காயும் ஒன்று.

  • சுரைக்காய் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது. இதனால் கோடைக் காலத்தில் சுரைக்காயை அதிகளவில் மக்கள் வாங்கி பயன்படுத்துவது வழக்கம்.
  • சுரைக்காய் வளர்ச்சிக்கு மண்ணின் காரம், அமிலத் தன்மை 6 முதல் 7 சதவீதமாக இருப்பது நல்லது. பொதுவாக இதனை அனைத்து வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம்.
  • இது வெப்ப மண்டலப் பயிராகவும், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. சில பகுதிகளில் மரங்கள், வேலிகளில் படர்ந்தும் வளரும்.

இரகங்கள் : கோ 1, பூசா சம்மர் (நீளம்), பூசா சம்மர் (உருண்டை), பூசா மஞ்சரி, பூசா மேகதூத், அர்கா பகார்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை: பலவிதமான மண் வகைகளிலும் பயிர் செய்யலாம். வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. பனிவிழும் பிரதேசங்களில் இதனைப் பயிர் செய்ய முடியாது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6.5-7.5 இருத்தல் வேண்டும்.

பருவம் : ஜீலை மற்றும் ஜனவரி

விதை அளவு:  ஒரு எக்டருக்கு 3 கிலோ விதைகள்.

விதை நேர்த்தி : விதைப்பதற்கு முன் விதைகளை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திரம் என்ற அளவில் உபயோகிக்கவேண்டும்.

நிலம் தயாரித்தல் மற்றும் விதைத்தல் : நிலத்தை அமைத்து 3-4 முறை உழவு செய்து கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும். பின்பு 2.5x2 மீட்டர் இடைவெளியில் வாய்க்கால்கள் 30x30x30 செ.மீ நீளம், அகலம், ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். பின்பு ஒவ்வொரு குழியிலும் 5 விதைகளை விதைத்து நீர் ஊற்ற வேண்டும். 15 நாட்கள் கழித்து குழி ஒன்றில் இரண்டு வளமான செடிகளை விட்டு விட்டு மற்றவைகள களைந்துவிட வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு உரம் 10 கிலோ இடவேண்டும். இத்தோடு அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் 6:12:12 என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக் கலவையை 100 கிராம் அளவுக்கு இடவேண்டும். மேலுரமாக பூக்கும் தருணத்தில் ஒவ்வொரு குழிக்கும் 10 கிராம் தழைச்சத்தை இடவேண்டும்.

பயிர்

 

இடவேண்டிய சத்துக்கள் (கிராம் குழி ஒன்றிற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிராம குழி ஒன்றிற்கு)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

சுரைக்காய்

விதைக்கும் போது குழி ஒன்றிற்கு

6

12

12

60

0

 

30 நாட்களுக்குப் பின்னர்

10

0

0

0

22

 

நீர் நிர்வாகம்

பத்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

விதைத்த 20 மற்றும் 40வது நாட்களில் களைக்கொத்து கொண்டு களைகளை நீக்குதல் வேண்டும். அதிக மழைக்காலங்களில் மூங்கில் குச்சிகளை நட்டு கொடிகளை ஏற்றிவிட்டால் காய்கள் அழுகி வீணாவதைத் தவிர்க்கலாம்.

 

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

வண்டுகள், பழஈக்கள் மற்றும் புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 50இசி 1 மில்லி மீதைல் டெமட்டான் 25 இசி ஒரு மில்லி அல்லது பென்தியான் 100 இசி 1 மில்லி போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும்.

சாம்பல் நோய் : இதனைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு டைனோகாப் 500 மில்லி அல்லது கார்பென்டைசெம் 500 கிராம் மருந்தைத் தெளிக்க வேண்டும். 

அடிச்சாம்பல் நோய் மேன்கோசெப் அல்லது குளோரோதலானில் மருந்தை 1 எக்டருக்கு 1 கிலோ என்ற அளவில் 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிப்பதால் அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பூசணிவகைக் காய்கறிகளுக்கு தாமிரம் மற்றும் கந்தகத் தூள்களை ஒருபோதும் தெளிக்கக்கூடாது.

அறுவடை

காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்யவேண்டும்.

மகசூல் : எக்டருக்கு 135 நாட்களில் 15 முதல் 20 டன் காய்களை அறுவடை செய்யலாம்.

 

English Summary: சுரைக்காய் சாகுபடி
Published on: 29 September 2018, 07:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now