சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 15 March, 2025 3:46 PM IST
TN Agriculture minister MRK Panneerselvam presenting state agri budget for the year 2025-26 in assembly (PIC credit : TN DIPR)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று 5 ஆவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2025-26 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

2025 - 26 ஆம் நதி ஆண்டிற்கான  வேளாண் பட்ஜெட் தாக்கல் நிகழ்வு மொத்தம் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பட்ஜெட்டை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பொது இடங்களில் எல்இடி திரைகள் மூலம் காலை 9:30 மணி முதல் வேளாண் பட்ஜெட் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வேளாண் பட்ஜெட் உரையை தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இந்திய அளவில் வேளாண் துறையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் உழவர் வாழ்வில் நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1631 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் துறை அமைச்சர் கூறினார்.

42 கோடியில் 1000 உழவர் நல சேவை மையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

உழவர் நல மையங்கள் வாயிலாக ரூபாய் 3 லட்சம் முதல் ரூபாய் 6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஆயிரம் வேளாண் பட்டதாரிகள் மற்றும் வேளாண் பட்டயதாரர்கள் மூலம் ரூபாய் 42 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கவும் முடிவு.

அதேபோல எள், சூரியகாந்தி, நிலக்கடலை ஆகிய எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டமும். மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலைவாழ்  உழவர்களுக்கான திட்டம்:

மலைவாழ்  உழவர்கள்  பயனடையும் வகையில் ரூபாய் 22.80 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம். அதேபோல உழவர்களை அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம். மண் வளத்தை மேம்படுத்த ரூபாய் 142 கோடியில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்டவையும் பட்ஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 238 கிராம ஊராட்சிகளிலும் ரூபாய் 269.50 கோடி மதிப்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம். உணவு எண்ணெய் தேவையில் தன்னிறைவடைய ரூபாய் 108.6 கோடியில் எண்ணெய் வித்துக்கள் இயக்கம் உள்ளிட்டவையும் அறிவிப்பு. வேளாண்மையில் அதிக உற்பத்தி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறியும் விவசாயிகளுக்கு பரிசுகள் அறிவிப்பு இதற்காக ரூபாய் 60 லட்சம் ஒதுக்கீடு.

புவிசார் குறியீடு பெற முயற்சிக்கும் அரசு:

அதோடு நல்லூர் வரகு, வேதாரண்யம் முல்லை, நத்தம் புலி, ஆயக்குடி கொய்யா, கப்பல் பட்டி கரும்பு முருங்கை ஆகிய வேளாண் விளைபொருட்களுக்கு தனித்துவ புவிசார் குறியீடு பெற ரூபாய் 15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்டா மாவட்டங்களில் 22 நிலை சேமிப்பு வளாகங்கள் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆறு நெல் சேமிப்பு வளாகங்கள், 25,000 இரும்பு இடை செருகுக்கட்டைகள், 2500 டிஜிட்டல் ஈரப்பத கருவிகள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தல ஒரு டிராக்டருடன் கூடிய நெல் உலர்த்து இயந்திரம் அமைக்கப்படும் என்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது பட்ஜெட்டில் அறிவிப்பானதை வெளியிட்டுள்ளார்.

Read more: 

டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தால் சாத்தியமான நெல் சாகுபடி

English Summary: TN Agriculture minister MRK Panneerselvam presents state agri budget for the year 2025-26 in assembly
Published on: 15 March 2025, 03:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now