இளைஞர்கள் ஒருவர் 6 பேர் அமர்ந்து செல்லும் எலெக்ட்ரிக் டூவீலரை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். மஹிந்திரா நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் ஆனந்த் மஹிந்திரா இவர் அவ்வப்போது சில வித்தியாசமான வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்வார். இவர் பகிர்ந்த பல வீடியோக்கள் இந்தியா முழுவதும் வைரலாக மாறியுள்ளது. குறிப்பாக வாகனம் குறித்த ஏதாவது வித்தியாசமான வீடியோக்கள் வந்தால் அதை நிச்சயம் பகிர்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் செம டிரெண்டிங்காக மாறியுள்ளது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)
வீடியோவில் இளைஞர்கள் ஒருவர் 6 பேர் அமர்ந்து செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளார். 2 வீல்கள் மட்டுமே கொண்ட இந்த ஸ்கூட்டரில் ஒருவர் பின் ஒருவராக டிரைவர் சேர்த்து மொத்தம் 6 பேர் பயணம் செய்யலாம். இந்த வீடியோவில் முதலில் இதை ஒரு இளைஞர் மட்டும் ஓட்டி வருகிறார். பின்னால் மீதி 5 பேர் அமர்வதற்கான இருக்கை இருக்கிறது. அது மட்டுமல்ல அவர்கள் வாகனம் பயணம் செய்யும் போது பேலன்ஸ் தவறாமல் இருக்க அவர்கள் பிடித்துக்கொள்ள ஒரு கைபிடி இருக்கிறது. கால்களை வைத்துக்கொள்ள புட்ரெஸ்டும் இருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜில் 150 கி.மீ பயணிக்கும் என கூறினார். அதாவது பேட்டரியை முழுமையாக சார்ஜ் போட்டு 6 பேர் 150 கி.மீ வரை பயணிக்கலாமாம். இது மட்டுமல்ல இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 8-10 ரூபாய் மட்டுமே செலவாகும். அப்படி என்றால் வெறும் ரூ10 செலவில் 150 கி.மீ பயணிக்க முடியும்.
குறைந்த விலை (Low Price)
அதுவும் 6 பேர் பயணித்தால் ஒரு நபருக்கு வெறும் ரூ1.66 தான் செலவாகும். இவ்வளவு குறைந்த செலவில் 150 கி.மீ பயணம் இதுவரை எந்த வாகனத்திலும் சாத்தியமில்லை. ஆனால் இந்த எலெக்ட்ரிக் டூவீலரின் வேகம் குறித்த தகவல்கள் இல்லை. ஆனால் இந்த வீடியோவில் மேலும் சில அம்சங்கள் இருப்பதைக் காண முடிகிறது. ஸ்கூட்டரின் முன்பக்கம் எல்இடி லைட் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இது ஹெட்லைட்டாக வேலை செய்யும். இரவு நேரங்களில் இந்த ஸ்கூட்டரை பயன்படுத்த உதவும்.
இந்த எலெக்ட்ரிக் டூவீலரை வடிவமைத்த இளைஞர்கள் இதைச் செய்வதற்காக ரூ10-12 ஆயிரம் வரை செலவானதாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க
கோவை இரயில் பயணிகளுக்கு நற்செய்தி: ரயில்வே அமைச்சரின் புதிய அறிவிப்பு!
சிலிண்டர் விலை முதல் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள்: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!