Others

Friday, 16 September 2022 11:15 AM , by: Elavarse Sivakumar

தங்கள் நிறுவனத்தை விட்டுச் செல்லும் ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு தரப்படும் என அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மார்க்கெட்டிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது வேறு நிறுவனத்திற்குச் செல்லும் ஊழியர்கள் மனதில் ஒருவிதக் கலக்கத்துடன் செல்வதைத் தவிர்க்க, ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள அந்த அமெரிக்க நிறுவனம்.

குறைந்த பட்சம் ஒரு நிறுவனத்தில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை எந்த சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக வேலை செய்வது என்பது சவால் மிகுந்த ஒன்று. அதை சமாளித்துவிடுவோர், வேறு நிறுவனங்களைத் தேர்வு செய்வது எளிதான காரியம்.

கொரில்லா நிறுவனம்

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கொரில்லா நிறுவனம் ஒரு மார்க்கெட்டிங் ஏஜென்சி, இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அவர்கள் வெளியேறும் போது கூட கடுமையான உணர்வுகள் ஏற்படாமல் இருக்க ஒரு தனித்துவமான கொள்கையை உருவாக்கியுள்ளது.

10 சதவீத சம்பள உயர்வு

அதன்படி இந்நிறுவனமானது வெளிச்செல்லும் ஊழியர்களை நன்றாக உணரவும், நேர்மறையான எண்ணத்துடன் அவர்கள் வெளியேறும் அதன் ஊழியர்களுக்கு 10 சதவீத உயர்வுடன் செட்டில்மெண்ட் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை ஒரு வெளிச்செல்லும் ஊழியர், ஒரு புதிய ஊழியர் மற்றும் நிறுவனத்திற்கு இடையே ஒரு 'சுமுகமான உறவை ஏற்படுத்தவே என அந்நிறுவனத்தின் நிறுவனரான ஜான் ஃபிராங்கோ கூறியுள்ளார்

இந்நிறுவனம் இத்திட்டத்தைக் கொண்டுவர முக்கிய காரணமே ஊழியர்கள் நிறுவனத்தைவிட்டு வெளியேறும் காலத்தில் புதிதாக வரும் ஊழியர்களுடன் நல்ல உறவைப் பலப்படுத்தவும், அவர்கள் அடுத்தவேலைக்குச் சேரும் வரை அவர்களின் நிதி நிலைமையை சுமுகமாகக் கொண்டு செல்லவும் உதவும் எனக் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க...

95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம்- அதிர்ச்சியில் கூலித்தொழிலாளி!

ஒரு மணி நேரத்திற்கு ரூ.5600 சம்பளம்-இதுவும் சூப்பர் பிஸ்னஸ்தான்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)