Others

Saturday, 07 May 2022 08:21 AM , by: Elavarse Sivakumar

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் சட்டப்பேரவைத் தொடரில் இந்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இரண்டாம் ஆண்டில் திமுக பயணிக்கிறது.

இதையொட்டி தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அதிரடி அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட உள்ளதாக கோட்டை வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

தேர்தலின்போது திமுக அளித்த 500 வாக்குறுதிகளில், 200 வாக்குறுதிகளுக்கு மேல் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஸ்டாலின் கூறிவருகிறார். இருந்தாலும், குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற தேர்தலின்போது அளித்த முக்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனத்துக்கு பதிலடி தரும் விதத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, டீசல் விலை குறைப்பு ஆகிய இரண்டு முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கால்சியம் குறைபாடு!

பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)