பொதுத்துறை ஊழியர்களுக்கு 12% ஊதிய உயர்வு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்துடன் , 5 ஆண்டு நிலுவைத் தொகையும் விடுவிக்கப்பட உள்ளது. எனவே ஊழியர்கள், இந்தத் தொகைக்கான செலவுகளே இப்போதேத் திட்டமிடலாம்.
2017 முதல்
பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊதியம் 12% உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்துறை இன்சூரன்ஸ் (அதிகாரிகளின் ஊதியம் மற்றும் பணி நிலை) திருத்த திட்டம் 2022 பற்றி அறிவித்துள்ளது. இதன்படி, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நிலுவைத்தொகையும்
இதன்படி, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு நிலுவைத்தொகையும் செலுத்தப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயர்த்தப்படுகிறது. இனி 2022 ஆகஸ்ட் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.
வலியுறுத்தல்
பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தாமதமாகி வருவதாக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். இந்நிலையில், பல மாதங்களுக்கு பின் தற்போது பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
போனஸ்
அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...